Published:Updated:

காணாமல்போன ஆர்.எஸ்.எஸ். சுதர்சன் கண்டுபிடிக்கப்பட்டார்!

Vikatan Correspondent
காணாமல்போன ஆர்.எஸ்.எஸ். சுதர்சன் கண்டுபிடிக்கப்பட்டார்!
காணாமல்போன ஆர்.எஸ்.எஸ். சுதர்சன் கண்டுபிடிக்கப்பட்டார்!
காணாமல்போன ஆர்.எஸ்.எஸ். சுதர்சன் கண்டுபிடிக்கப்பட்டார்!

மைசூர்:  இன்று காலை காணாமல் போன ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர்  கே.எஸ்.  சுதர்சன் கண்டு பிடிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் மைசூரில் தனது சகோதரர் வீட்டில் தங்கியிருந்த சுதர்சன், இன்று காலை 5 மணி அளவில் நடைபயிற்சிக்காக வெளியே சென்றிருந்தார்.

ஆனால் பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.இதனால் உறவினர்கள் பதற்றம் அடைந்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

மேலும் தகவல் அறிந்து ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களும் அங்கு விரைந்துவந்தனர்.

இந்நிலையில் காணாமல் போன சுதர்சனை காவல் துறையினர் ஒருபுறமும், உறவினர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மறுபுறமு  தீவிரமாக தேடி னர்.

இந்நிலையில் ஏரி ஒன்றின் அருகே சுதர்சன் அமர்ந்திருந்ததை கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வ்நதனர்.

 81 வயதாகும் சுதர்சன் முதுமை காரணமாக ஏற்படும் ஞாபகமறதி உள்ளிட்ட சில குழப்பங்கள் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.



 

##~~##