Published:Updated:

20 புதிய கால்நடை மருந்தகங்கள் அமைக்க ஜெ. உத்தரவு!

Vikatan Correspondent
20 புதிய கால்நடை மருந்தகங்கள் அமைக்க ஜெ. உத்தரவு!
20 புதிய கால்நடை மருந்தகங்கள் அமைக்க ஜெ. உத்தரவு!
20 புதிய கால்நடை மருந்தகங்கள் அமைக்க ஜெ. உத்தரவு!

சென்னை: 6 கோடி ரூபாய் செலவில், 20 புதிய கால்நடை மருந்தகங்களை  ஏற்படுத்திட  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
 
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "கால்நடைகளுக்கு  தரமான மருத்துவ சேவை வழங்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு, 585  கிளை நிலையங்களை ஊரக கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தவும்,  இவ்வாறு  தரம் உயர்த்தப்பட்ட 585 ஊரக கால்நடை மருந்தகங்களுக்காக,585 புதிய கால்நடை  உதவி மருத்துவர்கள், 585 கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிடங்களை  ஏற்படுத்தவும்,முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் சென்ற ஆண்டு உத்தரவிட்டார்.

இது மட்டுமின்றி,கால்நடை பராமரிப்புத் துறையில் ஏற்கெனவே காலியாக உள்ள 258  கால்நடை உதவி மருத்துவர்கள் பதவிகளையும் சேர்த்து மொத்தமாக 843 கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களை உடனடியாக நியமனம் செய்யவும்,  முதலமைச்சர் ஏற்கெனவே ஆணையிட்டார்.

அந்த வகையில் மேலும் கிராமப்புற மக்களின் நன்மைக்காக, அவர்களின்  இருப்பிடங்களுக்கு அருகிலேயே தரமான மருத்துவ சேவை வழங்கும் நோக்கத்துடன்  நடப்பு ஆண்டில் மேலும் 20 புதிய கால்நடை மருந்தகங்கள் 6 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்திட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

##~~##
கால்நடை பராமரிப்புத் தொழிலுக்கு அடுத்த முக்கியத் தொழிலாக விளங்கும் கோழி  வளர்ப்புத் தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழகத்தின் விழுப்புரம், கடலூர்,  அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய விழுப்புரம் மண்டலம்  மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய  சங்கரன் கோவில்மண்டலம் என இரு புதிய கோழி பண்ணைத் தொகுப்பு மண்டலங்களை  உருவாக்க முதலமைச்சர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி,இந்த மண்டலங்களில் உள்ள 7 மாவட்டங்களைச் சார்ந்த விவசாயிகள்  அவர்களின் சுயவிருப்பம் மற்றும் தகுதிக்கேற்ப 1000 முதல் 5000 கறிக் கோழிகள்  கொண்ட பண்ணைகள் அமைத்துக் கொள்வதற்காக 20 கோடியே 31 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர்  உத்தரவிட்டுள்ளார்.இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 230 பண்ணைகள்  அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது,
திண்டுக்கல், தர்மபுரி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம்,சிவகங்கை,தஞ்சாவூர், திருவாரூர்,திருவள்ளூர், திருச்சிராப்பள்ளி மற்றும் வேலூர் ஆகிய 16 மாவட்டங்களில் நாட்டு கோழி வளர்ப்பினை ஊக்கப்படுத்த,2 கோடியே 4 லட்சம் ரூபாய்  நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.இதன் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்த பட்சம் 250 கோழிகள் கொண்ட 35 பண்ணைகள்  அமைக்கப்படும்.
இதேபோன்று, மீனவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி  மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த மீனவர்களால் உபயோகப்படுத்தப்படும்  மண்ணெண்ணெயினால் இயக்கப்படும் வெளிபொருத்தும் இயந்திரம் பொருத்தப்பட்ட நாட்டு  படகிற்கு மானிய விலையாக லிட்டர் ஒன்றுக்கு 25 ரூபாய் வீதம் அளிக்கப்பட்டு வந்த மண்ணெண்ணெயின் அளவை 200 லிட்டரிலிருந்து 250 லிட்டராக உயர்த்தி வழங்கிட  முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
இதனால் அரசுக்கு கூடுதலாக 37 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவினம் ஏற்படும். எனவே, இந்த ஆண்டு மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் 250 லிட்டர் மண்ணெண்ணெய் திட்டத்திற்காக 47 கோடியே 60 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்  நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைச் சார்ந்த மீனவர்களுக்கு கூடுதலாக ஒரு படகிற்கு 100 லிட்டர் வரை வெளிச் சந்தை விலையில் வழங்குவதற்கும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
மாண்புமிகு தமிழக முதலமைச்சரின் இந்த நடவடிக்கைகள் கிராமங்கள் வளர்ச்சி அடையவும், மேம்படவும் வழிவகுக்கும்”எனக் கூறப்பட்டுள்ளது.