Published:Updated:

ராகுல்... சீரழிவு மோடி... பேரழிவு!

Vikatan Correspondent
ராகுல்... சீரழிவு  மோடி... பேரழிவு!
ராகுல்... சீரழிவு மோடி... பேரழிவு!

பிரபல எழுத்தாளரும்,  புக்கர் பரிசை வென்றவரும், சமூக போராளியுமான அருந்ததி ராய் ஆனந்த விகடனுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

அரச பயங்கரவாதம், சுதந்திரம் குறித்துப் பேசுகிறீர்கள். ஆனால், இலங்கையின்  பின்னின்று ஒரு போரை இந்திய அரசு நடத்தியபோது நீங்கள் என்ன செய்தீர்கள்?''

இலங்கைப் போருக்கு எதிராகப் பேசிய ஒரு சிலரில் நானும் ஒருத்தி. ஆனால், நான்  என்ன பேசினேன், என்ன செய்தேன் என்பது அல்ல முக்கியம். நீங்கள் என்ன  செய்தீர்கள்? உங்கள் தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் என்ன செய்தார்கள்? இலங்கை  அரசுடன் இந்திய அரசும் தமிழக அரசும் கூட்டு சேர்ந்துதான் செயல்பட்டன. எல்லாம்  சுயநல அரசியல்!

இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை நேரில் பார்த்து, அங்குள்ள  மக்களின் இழிநிலையைப் பற்றி நான் பேசி இருக்கிறேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள்  என்பதை உங்கள் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.''

ராகுல்... சீரழிவு  மோடி... பேரழிவு!

இந்தியா உடையும் என்று தொடர்ந்து சொல்கிறீர்கள். அப்படி உடைந்தால்,  ஓர் இந்தியராக அது உங்களைப் பாதிக்காதா?

இந்தியா என்கிற வார்த்தையை நாம் எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பதே  எனக்குத் தெரியவில்லை. தொன்மைமிக்க நாடு என்றா? உண்மையில் 1947-ல்தான்  இந்தியா என்ற நாடு உருவானது. அதுவும் பிரிவினையில் இருந்து. அப்படிப்  பிரிவினையால் உருவான ஒரு நாடு காலனி ஆதிக்கச் சக்திபோலத்தான் செயல்படுகிறது.

மக்கள் போராட்டத்தை அடக்க ராணுவத்தை அனுப்புவது ஆகட்டும், மற்ற நாடுகளிலும்  பிரிவினையை உருவாக்குவது ஆகட்டும்.தேசியம் என்பது தவறு அல்ல.ஆனால், அதில்  நியாயம் இருக்க வேண்டும்.

வரைபடத்தில் என்னுடைய நாட்டின் அளவு பெரியதாக அல்லது சிறியதாக இருக்கிறது  என்பது என்னைப் பாதிக்காது. ஆனால், நான் சார்ந்திருக்கும் நாட்டின் பெயரால்  நடத்தப்படும் வன்முறையும் ஒடுக்குமுறையும் என்னை வெகுவாகப் பாதிக்கும்.

##~~##

இந்தியாவை விற்றவர்.மன்மோகன் சிங்

இதுவரையிலான இந்தியப் பிரதமர்களிலேயே சிறந்தவர் என்று நீங்கள் யாரைச்  சொல்வீர்கள்?


அப்படி யாரும் இல்லை. ஆனால், மன்மோகன் சிங் மோசமானவர்.  இந்தியாவை விற்றவர்.

மோடி - ராகுல். பிரதமர் பதவிக்கு யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

 எவ்வளவு மோசமான நாடு இது... (சிரிக்கிறார்). இருவருமே பெரும்  சீரழிவையே கொண்டுவருவார்கள். மோடி இன்னமும் பேரழிவைக் கொண்டுவருவார்.

இவ்வாறு அவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார். 

- சமஸ்
படம் : சொ.பாலசுப்ரமணியன்