Published:Updated:

அரசு ஊழியர்களிடம் இருந்து பணத்தைப் பிடுங்கும் ஆட்சி: கருணாநிதி

Vikatan Correspondent
அரசு ஊழியர்களிடம் இருந்து பணத்தைப் பிடுங்கும் ஆட்சி: கருணாநிதி
அரசு ஊழியர்களிடம் இருந்து பணத்தைப் பிடுங்கும் ஆட்சி: கருணாநிதி
அரசு ஊழியர்களிடம் இருந்து பணத்தைப் பிடுங்கும் ஆட்சி: கருணாநிதி

சென்னை: தமிழக அரசு, மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்று கூறிக் கொண்டு அரசு  ஊழியர்களிடம் இருந்து பணத்தைப் பிடுங்குவதாகத் திமுக தலைவர் கருணாநிதி குற்றம்  சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,அரசு அலுவலர்களுக்குக் கொண்டு  வரப்பட்ட மருத்துவக் காப்பீடு திட்டம் குறித்த கேள்விக்கு, "தி.மு.கழக ஆட்சியில்  கொண்டு வந்த திட்டத்தின்படி அரசு ஊழியர்கள் இரண்டு லட்சம் ரூபாய் வரை அவசர  மருத்துவ சிகிச்சை செய்துகொள்ள முடியும்.

அதற்காக ஒவ்வொரு அரசு அலுவலரிடமிருந்தும் கழக ஆட்சியில் மாதந்தோறும் 25  ரூபாய் சம்பளத்தில் பிடித்துக் கொள்வார்கள். தற்போது ஜெயலலிதா ஆட்சியில் அரசு  அலுவலர்கள் நான்கு லட்சம் ரூபாய் வரை அவசர மருத்துவ சிகிச்சை செய்து கொள்ள  முடியும்.

 ஆனால் அவர்களின் சம்பளத்தில் மாதந்தோறும் 150 ரூபாய் பிடித்துக் கொள்ள 26-6- 2012 அன்று ஆணை  பிறப்பித்திருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட நோயாளிகள் 2 லட்சம்  ரூபாய் வரை சிகிச்சை பெறுவதை 4 லட்சம் ரூபாயாக உயர்த்தியிருப்பது கழக ஆட்சியில்  செய்ததைவிட வரவேற்புக்குரியது. ஆனால் அதற்காக அனைத்து அரசு அலுவலர்களும்  மாதந்தோறும் 150 ரூபாய் தர வேண்டும் என்பது அநியாயம் அல்லவா? தமிழக அரசில்  மொத்தம் சுமார் 12 லட்சம் அரசு அலுவலர்கள் உள்ளார்கள்.

##~~##
தலா 150 ரூபாய் வீதம் மொத்த அரசு அலுவலர்களிடமிருந்தும் மாதம் ஒன்றுக்கு அரசு  வசூலிக்கும் தொகை 1,800 லட்சம் ரூபாயாகும். மாதம் ஒன்றுக்கு சராசரியாக 100  அரசு அலுவலர்களுக்கு, அரசு 4 லட்சம் ரூபாய் வீதம் உதவி அளித்தால் கூட 400  லட்சம் ரூபாய்தான் அரசுக்குச் செலவாகும். எனவே அரசாங்கம் உண்மையிலேயே அரசு  அலுவலர்களுக்கு உதவி செய்கிறதா? பணத்தைப் பிடுங்குகிறதா? என்பதைப் புரிந்து  கொள்ள முடியவில்லை"என்று பதிலளித்துள்ளார்.
மேலும் விலைவாசி குறித்த கேள்விக்கு,"விலை வாசி குறித்து கவலைப்படுவோர் யார்?  மக்கள் தான் சிரமப்படுகிறார்கள். சென்னை, மொத்த சந்தையில், சர்க்கரை விலை  ஒரே மாதத்தில் மூட்டைக்கு 650 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாம். அதேபோல் பருப்பு  மற்றும் எண்ணெய் வகைகளின் விலையும் உயர்ந்துள்ளதாம்.
கடந்த மாதம், 2,950 ரூபாய்க்கு விற்ற 100 கிலோ சர்க்கரை மூட்டை தற்போது  3,600 ரூபாய்க்கு விற்பனையாகிறதாம். கடந்த மாதம் சில்லரை யில் ஒரு கிலோ 31  ரூபாய்க்கு விற்றது, சில நாட்களாக, 38 ரூபாய் வரை விற்கப்படுகிறதாம். இதன்மீது  நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசோ கேளாக்காதினராய் உறங்குகிறது " என்று   கூறியுள்ளார்.