''ஒரு தடவை நானும் வீராசாமி யும் கலை ஞர்கூட கார்ல சென்னைக்கு வந்துட்டு இருந்தோம். முன் சீட்ல கலைஞர். பின் சீட்ல நாங்க ரெண்டு பேர். வழியில் டிராஃபிக் ஜாம். ராத்திரி 11 மணிக்கு நின்ன நெரிசல் விலகி, விடியற்காலை ரெண்டு மணிக்குத்தான் புறப்பட்டது. அந்த நேரம் பின் சீட்டுல நாங்க ரெண்டு பேரும் அசந்து தூங்கிட்டோம். மறுநாள் கலைஞர் பேராசிரியர்கிட்ட, 'இவங்க ரெண்டு பேரும் எனக்குத் துணைக்கு வர்றாங்கன்னுதான் பேரு. நான் கொட்டக் கொட்ட முழிச்சுக்கிட்டு உட்கார்ந்து இருக்கேன். இவங்க ஜம்முனு தூங்குறாங்க’னு சொன்னார். 'ஏன்யா அப்படிப் பண்ணுனீங்க’னு கேட்டார் பேராசிரியர். நான் சட்டுனு யோசிக்காம, 'கலைஞரைத் தமிழ்நாட்டின் காவல் தெய்வம்னு சொல்றாங்க. அந்த தெய்வம் எங்க ரெண்டு பேரையும் காப்பாத்தும்கிற நம்பிக்கையில தூங்கிட்டோம்’னு சொன்னேன். ரெண்டு பேருமே பகபகன்னு சிரிச்சுட்டாங்க. அப்படி நாங்க கலைஞர்கிட்டயே காமெடி பண்ணி வந்தவங்க.ஆனால், இன்று சட்டசபை யில் நடப்பவை இதை விடப் பெரிய காமெடி'' - அதிர அதிரச் சிரிக்கிறார் துரைமுருகன்.

'பாடி லாங்குவேஜ்’ பஞ்சாயத்தில் சட்டசபை யைக் கலகலக்கவைத்த முன்னாள் அமைச்சரான துரைமுருகன் இருக்கும் இடத்தில் சிரிப்புக்குப் பஞ்சம் இருக்காது. சமீப சட்டசபை நிகழ்வுகள் குறித்தும் தி.மு.க-வின் நிலவரம் குறித்தும் அவரிடம் பேசியதில் இருந்து...

''அன்னிக்கு சட்டசபையில என்ன கலாட்டா பண்ணீங்க?''

''தமிழக சட்டசபை இதுக்கு முன் எப்போதும் இல்லாத ஒரு மயான அமைதியில் இருக்கு. ஒவ்வொரு உறுப்பினரும் தங்களை முன்னிலைப்படுத்திக்கணும், முதல்வருக்குத் தங்கள் இருப்பைத் தெரிவிச்சுக்கணும்னு நினைக்கிறாங்க. சபை நடவடிக்கைகளில் ஆர்வமாக எப்படிப் பங்கெடுப்பது, பிற கட்சியினருடன் எப்படி தோழமையாகப் பழகுவதுன்னு அ.தி.மு.க-வின் புதிய உறுப்பினர்களுக்குத் தெரியலை. அவங்களுக்கு அதைஎல்லாம் சொல்லிக் கொடுக்க வேண்டியது கட்சி சீனியர்களின் பொறுப்பு. ஆனா, அவங்களே ஏதோ பயத்தில் திரியிறாங்க.

அன்றைய தினம் அமைச்சர் கே.பி.முனுசாமி நிறைய கேள்விகளுக்குப் பதில் அளித்துக்கொண்டு இருந்தார். புது அமைச்சருக்கு வழக்கமாக அவ்வளவு கேள்விகள் தர மாட்டார்கள். ஆனால், மனிதர் சளைக்காமல் 20 நிமிஷம் தம்கட்டி தாக்குப்பிடித்து பதில் சொல்லிக்கொண்டு இருந்தார். சபை முடிந்ததும் அவரைப் பாராட்டலாம்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா, அதுக்குள்ள நான் சேஷ்டை பண்ணினதா என்னைச் சிக்கவெச்சுட்டார். இருந்தாலும், அடுத்த முறை அவரைப் பார்க்கும்போது கண்டிப்பா பாராட்டுவேன். எப்படி இருந்த சட்டசபை தெரியுமா இது?

போன அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஒருமுறை நான் சட்டசபையில் பேசிட்டு இருக்கும்போது, அந்தம்மா தவிர, ஓ.பி.எஸ்., பொன்னையன்னு ஐந்து மந்திரிகள் குறுக் கிட்டாங்க. எல்லாருக்கும் பதில் சொல்லிட்டே இருந்தேன். அப்போ ராமசாமினு ஒரு மந்திரி எந்திரிச்சுப் பேச அனுமதி கேட்டார்.

அப்போதைய சபாநாயகர் காளிமுத்து அவருக்கு அனுமதி மறுத்தார். நான் உடனே, 'அஞ்சு பேரைக் குறுக்கீடு பண்ண அனுமதிச்சீங்க. அவர் என்ன பாவம் பண்ணினார். அவருக்கும் ஒரு சான்ஸ் கொடுங்களேன்’னு சொன்னேன். 'என்னய்யா உன்னோட பெரிய தொல்லையாபோச்சு. தயவு பண்ணி பேசுங்க துரை’ன்னு சிரிச்சுட்டே சொன்னார் காளிமுத்து. அந்த மாதிரியான கலகலப்பு இப்போதைய சபையில் மிஸ்ஸிங். எல்லா ரும் உர்ருனு எதையோ பறிகொடுத்த மாதிரியே உட்கார்ந்திருக்காங்க. அந்தம்மா சிரிச்சா சிரிக்கிறாங்க. அவங்க கோபமானா அமைதியாகுறாங்க. பி.டி.ஆர்., தமிழ்குடிமகன், காளிமுத்து... இவங்கெல்லாம் சபாநாயகரா இருக்கும்போது, இலக்கியம் கலந்து நகைச்சுவையா பேசுவதை ரசிப்பாங்க... அனுமதிப்பாங்க. அவர்களுக்கு எங்களைப் போன்றவர்களின் தராதரம் தெரியும்!''

''அப்போ தற்போதைய சபாநாயகர் ஜெயக்குமாருக்கு உங்களின் தராதரம் தெரியாது என்கிறீர் களா?''

''அப்படிச் சொல்லலை. இவர் தி.மு.க. மாணவர் அணியில் எங்களுக்கு இளையவராக இருந்தவர். சட்டம் படித்தவர். நல்லவர். தனிப்பட்ட வகையில் பழகுவதற்கு எளியவர். இன்னும் சொல்லப்போனால், அதிர்ந்து பேசாதவர். எதிர்க் கட்சி வரிசையில் அமர்ந்து இருக்கும்போதுகூட சொல்ல வேண்டிய கருத்தை நளினமாகச் சொல்லக்கூடியவர். 'ஜெய் சபாநாயகரா வந்திருக்கார். சபையை நல்ல முறையில் நடத்திச் செல்வார்’ என மகிழ்ந்தோம். ஆனால், சபையில் என்னைப்பற்றி ஒரு அமைச்சர் குற்றம் சொல்கிறார். 'நான் அப்படிச் செய்யவில்லை’ என மறுத்துப் பேசக்கூட அனுமதி மறுக்கிறார். 'நீங்க இப்படித்தான் நடந்தாகணும். இல்லைன்னா, வெளியேத்திடுவேன்’கிறார். 'சட்டம் படித்தவர், குற்றம்சாட்டப்பட்ட வன் தன் தரப்பு வாதத்தைவைக்க அனுமதி மறுக்கலாமா? முதல்வராகவே இருந்தாலும் சபாந£யகரைக் கட்டுப்படுத்துவது போலவோ, ஆணையிடுவதுபோலவோ செயல்படக் கூடாது என்பது மரபு. ஆனால், இப்போது எல்லாமே நேரெதிராக நடக் கிறது.

மரியாதை நிமித்தம் எதிர்க் கட்சி உறுப்பினர்களுக்கு வணக்கம் சொன்னால்கூட, 'அம்மா வர்றாங்கண்ணே... அம்மா வர்றாங்கண்ணே... அப்புறம் பேசுவோம்’னு ஓடுறாங்க. லாபியில் பார்த்தால்கூட, சைடா திரும்பி யாருக்கும் தெரியாதபடி வணக்கம் வெச்சுட்டு ஓடுறாங்க. (நடித்துக் காட்டுகிறார்). 'ஐயோ பாவம்! அவங்களைத் தொல்லை பண்ணக் கூடாது’ன்னு நாங்களும் விட்டுர்றோம்!''

''தி.மு.க. எதிர்க் கட்சியாகக்கூட வர முடியாத அளவுக்கு மோசமான தோல்வி அடைய என்ன காரணம்?''

''வேறென்ன, மக்கள் ஓட்டுப் போடாததுதான். தோத்துப்போன எங்களுக்கும் எப்படித் தோத்தோம்னு தெரியலை. ஜெயிச்சவங்களுக்கும் எப்படி ஜெயிச்சோம்னு தெரியலை. ஓட்டுப் போட்டவங்க எல்லாம், 'உங்களுக்குத்தான் சார் போட்டோம். எப்படி சார் தோத்தீங்க’னு கேட்குறாங்க. தொகுதியை எட்டியே பார்க்காத பல எம்.எல்.ஏ-க்கள் ஜெயிச்சும் இருக்காங்க. தொகுதியிலேயே கிடையா கிடந்த பலர் தோத்தும் போயிருக்காங்க. யாருக்கும் தெரியாத, புரியாத புதுமையான புதிர் இந்தத் தேர்தல்!''

''நில அபகரிப்பு புகாரில் தினம் தினம் கைது வைபோகம் நடக்கிறதே?''

''உண்மையாகவே நிலத்தை அபகரித்தவன் தி.மு.க-காரனாகவே இருந்தாலும், கைது செய்வதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை. நிலத்தை விற்றவனை எல்லாம் மிரட்டி அழைத்து வந்து 'நிலத்தைக் குறைந்த விலைக்குத் தரவில்லை என்றால், கொன்றுவிடுவேன் என்று மிரட்டினார்’ என ஒரு வரியைக் கவனமாகச் சேர்த்து, கிரிமினல் வழக்குக்குள் வரும் வகையில் புகார்களை அமைத்து வழக்குப் பதிவு செய்து கைது செய்து வருகின்றனர். இந்தப் பழிவாங்கும் போக்கைத்தான் கண்டிக்கிறோம். இதைத் தவிர, நில அபகரிப்பு விசாரணையைக் கடந்த 2000-மாவது ஆண்டில் இருந்து எடுத்துக்கொண்டு விசாரிக்க வேண்டும் எனக் கேட்கிறோம். அதை மறுக்கிறார்கள்!''

''அடுத்த தலைவர்பற்றி பொதுக் குழு விலேயே விவாதம் நடத்தும் அளவுக்கு ஸ்டாலின்-அழகிரி இடையேயான மோதல் வெளிப்படையாக இருக்கிறதே?''

''ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் எழுதும் அளவுக்கு நம் பத்திரிகைகளுக்கு கற்பனா சக்தி அதிகரித்துவிட்டது எனத் தெரிகிறது. பத்திரிகைகளில் வெளியான அளவுக்கு எல்லாம் யாரும் எங்கும் பேசவில்லை. அப்படிப் பேசக்கூடிய தைரியமும் யாருக்கும் கிடையாது. கழகத்தைப் பொறுத்தவரை கலைஞர் இருக்கும் வரை அவர்தான் தலைவர். அதில் கட்சித் தொண்டர்கள் யாருக் கும் மாற்றுக் கருத்து கிடையாது. கலைஞருக்குப் பின் என்பதற்கு, இன்னும் நீண்ட காலம் இருக்கிறது. என்றேனும் ஒருநாள் அப்படி ஒரு காலம் உருவாகுமானால், அந்த வெற்றிடத்தைக் காற்று நிரப்புவதுபோல்

இயக்கத்தின் தொண்டர்களுள் தொண்டனாக இருந்து, அன்னையைப்போல் அரவணைக்கும் ஆற்றல் உள்ளத்தோடு கட்சியை வழி நடத்தும் ஒருவர், அந்த இடத்தை நிரப்புவார். இது ஒரு ஜனநாயக இயக்கம். மடம் அல்ல அடுத்த மடாதிபதி யார் என்று தெரிவிப்பதற்கு!''

''எதிர்க் கட்சித் தலைவராக விஜயகாந்த் தின் செயல்பாடு எப்படி இருக்கிறது?''

''அவரைப்பற்றி என்ன சொல்லலாம்'' என நீண்ட நேரம் யோசித்து, ''புலி பதுங்குகிறதோ என்னவோ?'' என்றவர் ''இல்லல்ல... இந்தக் கேள்விக்கு பதில் சொல்லாம பாஸ் பண்றேன்னு எழுதிக்குங்க. கேள்வியிலாவது பாஸ் பண்ணிட்டுப் போகட்டுமே!''