ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

இரண்டு வருடங்களுக்குள் ஸ்டாலின் தனது செல்வாக்கை மீட்பாரா?

மீட்க வேண்டும். மீட்பார் என்று கருணாநிதி எதிர்பார்க்கிறார். மீட்பதற்கான முதல் அடிகூட இன்னும் எடுத்து வைக்கப்படவில்லை!

ஆர்.அஜிதா, கம்பம்.

'கவர்னர் பதவி வகிக்கும் ஒருவருக்கு எதிராக குற்ற வழக்கு தொடர முடியாது. இதற்கு இந்திய அரசமைப்புச் சட்டம் இடம் அளிக்கவில்லை’ என்று சொல்வது சரியா?

அரசியலமைப்புச் சட்டம் 361-ன்படி ஜனாதிபதி, கவர்னர்கள் மீது சிவில், கிரிமினல் வழக்குகளோ அல்லது வாரண்டோ பிறப்பிக்க முடியாது என்பது உண்மைதான்.

டெல்லியின் முன்னாள் முதல்வரும் இன்றைய கேரள கவர்னருமான ஷீலா தீட்ஷித் சொன்னதன் அடிப்படையில் நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள். காங்கிரஸ் ஆட்சி முடியும் முன்பு, அவசர அவசரமாக கவர்னர் ஆனவர் அவர். காமன்வெல்த் விளையாட்டு ஊழல் வழக்கில், தான் நிச்சயம் சிக்குவோம் என்பதை உணர்ந்ததால்தான், டெல்லி மாநில அரசியலில் இருந்து அவர் விலகினார்.

கவர்னர் பதவியில் இருக்கும்போது வழக்கு போட முடியாது என்றுதான் சட்டத்தில் இருக்கிறதே தவிர, பணிநீக்கம் செய்துவிட்டு வழக்குப் போடலாம். அதனை சட்டம் தடுக்கவில்லை.

ஒருவேளை லோக்பால் மசோதா எந்த சேதாரமும் இல்லாமல் நிறைவேறினால், கவர்னர் பதவியில் ஒருவர் இருக்கும்போதே வழக்கு பாய வழிவகுக்கும். கவர்னர்கள் என்ன கடவுளா?

அ.குணசேகரன், புவனகிரி.

ரயில்வே பட்ஜெட் எப்படி இருந்தது?

நெல்லை, மலைக்கோட்டை, பாண்டியன் போன்ற எக்ஸ்பிரஸ் ரயில்களை நிறுத்திவிடுவார்களோ என்று பயந்தேன். அது நடக்கவில்லை. புதிய ரயில் விடாவிட்டாலும், பழைய ரயிலை நிறுத்தாமல் இருந்ததற்கே பாராட்டத்தானே வேண்டும்!?

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

'தனியார் கட்டடம் இடிந்து விழுந்தால் அரசு பொறுப்பல்ல’ என்று தமிழக வீட்டுவசதி அமைச்சர் வைத்திலிங்கம் அறிவித்திருப்பது சரியா?

அப்படியானால், தனியார் கட்டடம் கட்டுவதற்கு அரசிடம் எதற்காக அனுமதி கேட்கச் சொல்கிறார்கள்? யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானால் கட்டிக்கொள்ளலாம் என்று அவிழ்த்து விட்டுவிட வேண்டியதுதானே? இதைச் சொல்வதற்கு ஓர் அமைச்சர் தேவையா?

இந்த விவகாரத்தில் விதிமுறை மீறலும் அதிகாரிகளின் அலட்சியமும் இருக்கிறது. அதில் நடவடிக்கை எடுத்தால்தான், அடுத்து இன்னொரு மவுலிவாக்கம் நடக்காமல் காப்பாற்ற முடியும்!

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

காங்கிரஸ் பட்ஜெட்டில் இருந்து பி.ஜே.பி-யின் பட்ஜெட் எந்த வகையில் மாறுபட்டு இருக்கிறது?

காங்கிரஸ் பட்ஜெட்டை வாசிப்பது காங்கிரஸ்காரர். பி.ஜே.பி பட்ஜெட்டை வாசிப்பது பி.ஜே.பி-காரர். இந்த மாறுபாடு போதாதா? இன்னும் வேண்டுமா?

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்.

சட்டசபையில் எதிர்க்கட்சியினரை, 'ஓடுகாலி’கள் என்று அமைச்சர் ஒருவர் விமர்சனம் செய்துள்ளாரே?

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்வது, ஓர் அரசியல் கட்சிக்கு தரப்பட்டுள்ள அடிப்படையான உரிமை. தங்களது எதிர்ப்பைக் காட்டும் அடையாளமாக வெளிநடப்பு செய்கிறார்கள். சபையில் கோஷம் போடுவது, நாக்கைத் துருத்துவது, அடிக்க வருவது, ஆபாசமாகப் பேசுவது போன்றவைதான் குற்றம், கண்டிக்கத்தக்கதே தவிர, வெளிநடப்பு செய்வது அவர்களது உரிமைதான். இதனை அ.தி.மு.க-வினர் எதிர்க்கட்சி வரிசையில் இருக்கும்போது தொடர்ந்து செய்துள்ளார்கள். வெளிநடப்பு செய்ததற்காக, எதிர்க்கட்சியினரை 'ஓடுகாலி’கள் என்று அமைச்சர் ஒருவர் பொறுப்பற்று பேசுவது தவறானது.

'சபைக்குள் ஏன் வர மறுக்கிறீர்கள்?’ என்று கேட்பது, வருகிற எதிர்க்கட்சியினரை பேசவிடாமல் தடுப்பது, அதனைக் கண்டித்து வெளிநடப்பு செய்தால் 'ஓடுகாலி’ என்று சொல்வது என்று போனால், அது ஜனநாயக மாண்பு ஆகாது!

எம்.முருகேசன், திண்டுக்கல்.

புராணங்கள், இதிகாசங்கள் பெண்களை இழிவுபடுத்துகின்றன என்று மொத்தமாக ஒதுக்கிவிட முடியுமா?

இது மேலோட்டமான கருத்துத்தான். கதைகளை நுனிப்புல் மேய்ந்துவிட்டு அப்படிச் சொல்ல முடியாது. உதாரணத்துக்கு, மகாபாரதக் கதையில் வரும் திரௌபதியை எடுத்துக்கொள்ளுங்கள். யாரைக் கேட்டாலும், 'ஐந்து பேரை மணந்தவள்’ என்று சொல்வார்கள். ஆனால், திரௌபதியின் பாத்திரம்தான் பெண்ணுரிமையை இந்திய சமூகத்தில் முதலில் பேசியது.

திரௌபதியை தர்மன் சூதாட்டத்தில் வைத்து இழந்துவிட்டான். அப்போது திரௌபதியை அழைக்க வருகிறார்கள். 'தர்மர் என்னை முதலில் பணயம் வைத்துவிட்டு தன்னை இழந்தாரா? அல்லது, தன்னை இழந்துவிட்டு என்னை வைத்தாரா?’ என்று திரௌபதி கேட்கிறாள். தன்னை இழந்துவிட்ட அடிமையால், என்னை அடமானம் வைக்கும் உரிமை இல்லை என்று கேட்கும் துணிச்சல் திரௌபதிக்கு இருந்தது. அவ்வளவு பெரிய அரண்மனையில் உட்கார்ந்திருந்த பீஷ்மர், துரோணர், விதுரர் ஆகிய பெரியவர்கள் அனைவரையும் பார்த்து, 'நீங்கள் உங்கள் தன்மையை இழந்துவிட்டீர்கள்’ என்று கர்ஜிக்கும் மனுஷியாய் திரௌபதி இருந்தாள்.

இவள் துன்பப்படுவதைப் பார்த்து திருதராஷ்டிரன், சலுகை தருவதன் அடையாளமாக வரம் தருகிறார். முதல் இரண்டு வரங்களை வாங்கிக்கொள்ளும் திரௌபதிக்கு, மூன்றாவது வரமும் தருகிறார் திருதராஷ்டிரன். 'பேராசை அறத்தைக் கொல்லும். எனவே, இன்னொரு வரம் வேண்டாம்’ என்று உதாசீனம் செய்தவள் திரௌபதி. இந்த கர்வம்தான் அவளது குணம்.

திரௌபதியைப் பற்றி உருகி உருகி எழுதியவர் 'வந்தே மாதரம்’ பாடிய பக்கிம் சந்திரர். அவர் சொல்லியிருக்கிறார்: 'ராவணன் எளிதில் சீதையை அபகரித்துவிட்டான். அவன் திரௌபதியை அபகரிக்க முயன்றிருந்தால், சீசகன் போல உயிரிழந்திருப்பான். அல்லது, ஜயத்திரதன் போல திரௌபதியால் தரையில் வீழ்த்தப்பட்டு இருப்பான்.’

வி.பரமசிவம், சென்னை-25.

சட்டசபைக்கு தாமதமாக வரும் தன் கட்சி எம்.எல்.ஏ-க்களூக்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளாரே ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே?

இங்கும் அதனை அமல்படுத்தலாம். சபைக்கு வராத எம்.எல்.ஏ-க்களுக்கு நிறையவே அபராதம் விதிக்கலாம்!

ராஜசிம்மன், கிருஷ்ணகிரி.

'இன்னும் தமிழன் அரசியலிலே விழிப்பு அடையவில்லை’ என்கிறாரே கருணாநிதி?

தி.மு.க வென்றால், 'தமிழன் தன்னை தமிழனாக உணர்ந்துவிட்டான்’ என்றும், தி.மு.க தோற்றால், 'தமிழன் தன்னை தமிழனாக உணரவில்லை’ என்றும் சொல்வது கருணாநிதியின் வழக்கம். பழக்கம். ஓட்டுப் பெட்டியில் மட்டுமே தமிழின உணர்ச்சி இருக்கிறது என்று நினைப்பதன் விளைவு இது!