''இந்தப் பணியில் இருந்து என்னை நீக்கியதற்காக நான் ஒருபோதும் வருத்தப்படப்போவது இல்லை. என் நேர்மைக்குக் கிடைத்த பரிசு இது. புதுச்சேரியை சுரண்டுவதே ஆளும் என்.ஆர். காங்கிரஸுக்கு முக்கியப்பணியாக உள்ளது. இதற்கு என்னையும் துணைசெய்யச் சொல்லி பேரம் பேசினார்கள்.

ஊழலற்ற ஆட்சியை அமைக்க பல்வேறு நடவடிக் கைகளை எடுத்தேன். எதற்குமே எனக்கு ஒத்துழைப்பு தரவில்லை. அதனால் நான் பலிகடா ஆக்கப்பட்டுவிட்டேன்'' என்று சொல்லியிருக்கிறார் புதுவை கவர்னர் பதவியில் இருந்து தூக்கியடிக்கப்பட்ட வீரேந்திர கட்டாரி. விரக்தியின் உச்சத்தில் அவர் உதிர்த்த வார்த்தைகள் இவை.

கடந்தாண்டு ஜூலை மாதம் புதுவை மாநிலத்தில் துணைநிலை ஆளுநராக பதவி வகித்த இக்பால் சிங், ஆளுங்கட்சியான என்.ஆர். காங்கிரஸுக்கு அதிக நெருக்கம் காட்டியதன் விளைவாக மாற்றப்பட்டார். அப்போதைய மத்திய அமைச்சர் நாராயணசாமி இப்படிச் செய்ததாக, ரங்கசாமி ஆட்கள் புகார் சொன்னார்கள். புதிய ஆளுநராக பஞ்சாப்பைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் வீரேந்திர கட்டாரியா நியமிக்கப்பட்டார். அவர் பதவியேற்ற சமயத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை பெரும் சவாலாக இருந்தது. காலாப்பட்டில் மத்தியச் சிறையில் இருந்த தண்டனை கைதிகள் சிலர், உள்ளே இருந்தபடியே வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்களை மிரட்டி வலுக்கட்டாயமாக மாமூல் பெற்று வந்தனர். இது தொடர் கதையாகிக்கொண்டிருந்தது. முதல்வர் ரங்கசாமியோ, எதற்குமே பதற்றப்படாமல் தன் மௌனத்தையே பதிலாகக் கொடுத்தார்.

இதுகுறித்து ரங்கசாமியிடம் பேசியும் நடவடிக்கை இல்லாததால், தானே நேரடியாகக் களத்தில் இறங்கினார் ஆளுநர். மத்தியச் சிறைக்கு சென்றார். செல்போன் டவர்களை அகற்றுவதற்கு துரித நடவடிக்கைகளை எடுத்தார். அதன் பிறகு இந்த மாமூல் குறைந்தது. சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டுவந்தார். இது ரங்கசாமி தரப்பினரைக் கொதிப்படைய வைத்து, ஆளுநர் - முதல்வருக்குமான உறவில் பெரும் விரிசல் விழுந்தது.

''சட்டம் - ஒழுங்கு பிரச்னையை ஆளுநர் கையில் எடுத்ததை ரங்கசாமி விரும்பவில்லை. இது யூனியன் பிரதேசம் என்பதால், ஆளுநர் மூலம் அனைத்து கோப்புகளும் கையெழுத்தாகி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு சாதகமாக செயல்பட மறுத்த சென்டாக் கமிட்டியின் தலைவர் ஜெயகுமாரை, ரங்கசாமி வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்ய வைத்தார். அதைத் தெரிந்துகொண்ட கட்டாரியா, அந்த ராஜினாமா கடிதம் செல்லாதபடி ஆக்கிவிட்டார். சிலரின்

சொந்த லாபங்களுக்காக பரிந்துரைக்கப்பட்ட எட்டுக்கும் மேற்பட்ட கோப்புகளில் கட்டாரியா கையெழுத்திடாமல் கிடப்பில் போட்டிருந்தார்.

இந்த நிலையில்தான், கட்டாரியா பெரிதும் நம்பிய மாநிலத்தின் தலைமைச் செயலர் சேட்டன் சாங்கியும், ரங்கசாமியின் ஆதரவாளரானார். அனைத்து கோப்புகளிலும் கையெழுத்திட எவ்வளவு வேண்டுமானாலும் தரத் தயாராக உள்ளோம் என்று ஆளுநரிடமே சிலர் பேரம் பேசியுள்ளனர். கலால் மற்றும் இதரத் துறைகளில் 500 கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்குக் கடன் வைத்துள்ளவர்களுக்கு ஆதரவாக ஆளுங்கட்சியினர் செயல்பட்டதை கட்டாரியா கண்டித்தார். ஒரு கட்டத்துக்கு மேல் ஆளுநர் புதுச்சேரியில் இருந்தால் ஆட்சி நடத்த முடியாத என்று உணர்ந்த ரங்கசாமி, தேர்தல் முடிந்தவுடன் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஆளுநரை மாற்றும்படி வலியுறுத்தினார். இந்த சூழ்நிலையில் சங்கரராமன் வழக்கு மேல்முறையீடு கோப்பில் கையெழுத்து போட்டு வசமாக கட்டாரியா மாட்டிக்கொண்டார்'' என்கிறார்கள்.

பணி நீக்கப்பட்டவுடன் செய்தியாளர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்திருந்தார் கட்டாரியா. கவர்னர் மாளிகை முன்பு என்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் எனத் தெரிந்தும், குறைந்த அளவிலான போலீஸாரே பாதுகாப்புப் பணிக்குப் போடப்பட்டிருந்தனர். பிறகு பத்திரிகையாளர்களைச் சந்தித்த கட்டாரியா, ஆளும் அரசால் தனக்குக் கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் குறித்து மனம் திறந்து பேசினார். ''என்னை சீக்கிரமாக விரட்டிவிடுவதில் சிலர் குறியாக இருக்கின்றனர். அதில், தலைமைச் செயலர் சேட்டன் சாங்கியும் ஒருவர். இங்கிருந்து கிளம்புவது குறித்து நான் வருதப்படப்போவது இல்லை. ரங்கசாமி நல்லவர். ஆனால், அவரைச் சுற்றி நயவஞ்சகக் கூட்டம் உள்ளது. என்னை இங்கிருந்து விரட்ட பல யுக்திகளை அவர்கள் கையாண்டுள்ளனர். புதுவை மக்களுக்கு துளியும் உதவாத எட்டு கோப்புகளில் நான் கையெழுத்து போடவில்லை. என் நேர்மைக்காக இப்போது வேதனையை அனுபவிக்கிறேன். மனிதர்கள் வருவார்கள். செல்வார்கள். அவர் செய்த பணி மட்டுமே எப்போதும் நிலைத்திருக்கும். இதை சிலர் உணர வேண்டும்'' என்றார்.

ஆளும் என்.ஆர். காங்கிரஸ் மீதான வீரேந்திர கட்டாரியாவின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் அந்தக் கட்சி மறுத்துள்ளது. 'பணி நீக்கப்பட்ட ஆளுநர், ஆளுநர் நாற்காலியில் அமர்ந்து பேட்டி கொடுப்பதே தவறு’ என்று கட்டாரியா மீது ஆவேசப்படுகின்றனர். ஆனால், பணி நீக்கப்பட்ட ஆளுநரிடம் என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ நேரு, 'அரசு ஊழியர்கள் பணிக்கு ஒழுங்காக வருவது இல்லை அவர்கள் காலை 9 மணிக்கெல்லாம் அலுவலகம் வர வேண்டும்’ என்று மனு ஒன்றைக் கொடுத்து அதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கட்டாரியாவை கேட்டுக்கொண்டதுதான் ஹைலைட் காமெடி.

- நா.இள.அறவாழி, படங்கள்: ஜெ.முருகன்