Published:Updated:

'2,200 ஆண்டுகள் பழைமையான வாழ்வியல்!' - கீழடி ஆய்வுக்கு மத்திய அமைச்சரின் பதில்!

கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்களின் பழைமை குறித்து கனிமொழி எம்.பி. மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் மகேஷ் சர்மா பதிலளித்துள்ளார்.

மதுரை அருகே, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கீழடி கிராம எல்லையோரம் உள்ள வைகை ஆற்றங்கரையில், கடந்த 2015-ம் ஆண்டு அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இதில், எண்ணற்ற ஆதாரங்கள் கிடைத்தன. இதன்படி, சுமார் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்னர் வைகை நதிக்கரையில் பழைமையான தமிழ் நகரம் அமைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், மண் பானைகள், இரும்புக் கருவிகள், முத்துக்கள், பளிங்குக்கற்கள் உள்ளிட்ட பல பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில் பல பொருள்களில் சங்க காலத்து தமிழர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. 

இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருள்களின் பழைமை குறித்து இன்று மாநிலங்களவையில் நடந்த கூட்டத்தில் கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய அமைச்சர் மகேஷ் சர்மா கூறுகையில், ‘கீழடியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்கள் 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை ஆகும். ஒரு பொருள் 2,160 ஆண்டுகளும், மற்றொரு பொருள் 2,200 ஆண்டுகளும் பழைமை வாய்ந்தவை. சமீபத்தில் கீழடியில் கிடைத்த இரண்டு பொருள்களையும் அமெரிக்காவில் உள்ள பீடா அனாலிடிக் என்ற நிறுவனம் ஆய்வு செய்துள்ளது’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு