சுந்தரிப்ரியன் சூர்யா, வேதாரண்யம்.

அதிநவீன காலத்திலும் முதல்வர்கள் தங்கள் மாநிலக் கோரிக்கைக்காக பிரதமருக்குக் கடிதம் எழுதுவது ஏன்? அலைபேசி, தொலைபேசியில் பேசலாமே?

பெரும்பாலும் இது மாதிரியான கடிதங்கள், சம்பந்தப்பட்டவருக்கு அனுப்புவதற்கு முன்னதாக பத்திரிகைகளுக்குத்தான் அனுப்பி வைக்கப்படுகின்றன. இப்படி நான் கடிதம் எழுதியிருக்கிறேன் என்று காட்டுவதுதானே அதன் அர்த்தம். அலைபேசியில் பேசினால், அது ஊருக்குத் தெரியாதே?

உமரி.பொ.கணேசன், மும்பை-37.

பி.ஜே.பி - சிவசேனா உறவில் விரிசல் ஏற்பட்டு வருகிறதே?

மகாராஷ்டிராவில் மாநில சட்டசபைத் தேர்தல் வரப்போகிறது. கூட்டணிக்கு யார் தலைமை தாங்குவது, யாருக்கு முதலமைச்சர் பதவி என்ற சிக்கல் வளர்ந்து வருகிறது. அதுதான் விரிசலுக்குக் காரணம். இவர்கள் இருவரும் தனித்துப் போனால், அதனுடைய பலனை காங்கிரஸ் பெற்றுவிடும்.

அர்ஜுனன்.ஜி, திருப்பூர்-7.

அ.தி.மு.க செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ஆறாவது தீர்மானத்தை தாம் அதிகம் ரசித்ததாக கருணாநிதி சொல்லியிருக்கிறாரே?

அது கருணாநிதியின் கிண்டல்! என்ன தீர்மானம் தெரியுமா அது?

'முந்தைய மைனாரிட்டி தி.மு.க ஆட்சிக் காலத்தில் விதிக்கப்பட்ட மின்கட்டுப்பாட்டினை முற்றிலுமாக நீக்கி, தமிழகத்தை மின்வெட்டே இல்லாத மாநிலமாக ஆக்கிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்குப் பாராட்டும் நன்றியும்’ என்பதுதான் அந்தத் தீர்மானத்தின் சாராம்சம்.

கருணாநிதி மட்டுமல்ல, தமிழக மக்களும் ரசிக்கத்தானே செய்வார்கள்?

எஸ்.பி.பாபு, முள்ளக்காடு.

நதிகள் தேசியமயமாக்கப்படுவது எப்போது நடக்கும்?

கர்நாடகாவில் இருந்து காவிரியும், கேரளாவில் இருந்து முல்லை பெரியாறும் பிரச்னை இல்லாமல் தமிழகத்துக்கு கிடைப்பதற்கே பல ஆண்டுகள், பல்வேறு பிரச்னைகளால் முட்டுக்கட்டை விழுந்துள்ளது. இதில் வட இந்தியாவில் இருந்து தென் இந்தியாவுக்கு நதிநீரைக் கொண்டுவருவதெல்லாம் பெரிதினும் பெரிய விவகாரம். இதற்கு காலவரையறை வைக்க முடியாது. எத்தனை லட்சம் கோடி ஆகும் என்பதும் கணிக்க முடியாதது.

மேலும், நதிகளை அதன் போக்குகளில் இருந்து மாற்றுவதை சூழலியல்வாதிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். அந்த வாதங்களும் உன்னிப்பாகக் கவனிக்கத்தக்கது.

ரேவதிப்ரியன், ஈரோடு-1.

குஜராத் மாநிலத்தில் வல்லபபாய் படேல் சிலை அமைக்க மத்திய அரசு 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உள்ளதே?

இதைத்தான் நம்முடைய கிராமத்தில், 'ஊரான் வீட்டு நெய்யே.... என் பொண்டாட்டி கையே’ என்பார்கள்.

வீ.ஹரிகிருஷ்ணன், திருச்சி-17.

தமிழக காங்கிரஸுக்கு யார் தலைமைப் பொறுப்பு ஏற்றால் நல்லது?

ஞானதேசிகனுக்கு என்ன குறைச்சல்? அவரே இருக்கட்டும். 'எங்கள் ஆட்சியில் நடந்த ஊழல்கள் மீது நாங்களே நடவடிக்கை எடுக்காமல் மறைத்திருந்தால், தோற்றிருக்க மாட்டோம்’ என்று சொன்ன ஞானதேசிகனை ஏன் விடவேண்டும்?

மேலும், இந்தியா முழுவதும் காங்கிரஸ் வெற்றிபெற்று தமிழ்நாட்டில் மட்டும் காங்கிரஸ் தோற்றிருந்தால் ஞானதேசிகனை குற்றம் சொல்லலாம். காங்கிரஸ் ஆளும் மாநிலத்திலேயே காங்கிரஸ் தோற்றுள்ளது. 1967-க்குப் பிறகு ஆட்சிக்கே வர முடியாத காங்கிரஸ், தமிழகத்தில் தோற்றதில் என்ன அதிர்ச்சி இருக்க முடியும்?

சங்கீதா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை.

சென்னை விழாக்களில்கூட காணொலிக் காட்சி மூலமாகவே முதல்வர் கலந்துகொள்கிறாரே?

பெரும்பாலான அரசு விழாக்கள், வீண் ஆடம்பரங்கள்தான். ஒரு மணி நேரம் நடக்கும் விழாவுக்காகப் பல லட்சம் ரூபாயை ஒவ்வொரு அரசுத் துறையும் செலவு செய்து வருகின்றன. அதனைத் தவிர்த்து காணொலிக் காட்சி மூலமாகத் திட்டத்தைத் தொடங்கிவைப்பது, கட்டடங்களைத் திறந்து வைப்பது சரியானதுதான். இந்த விழாவுக்கான செலவுகளை வேறு ஆக்கபூர்வமான பணிகளுக்குப் பயன்படுத்தலாம்.

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

பட்டினத்தார் கையில் உள்ள கரும்பு, வாழ்க்கை இனிப்பானது என்பதைச் சொல்லத்தானே?

பட்டினத்தார் கையில் கரும்போடுதான் வலம் வந்தார். முக்தி அடைவதற்கு வழி கேட்டதாகவும், கையில் கரும்பைக் கொடுத்த குரு, 'இது எப்போது இனிக்க ஆரம்பிக்கிறதோ, அந்த ஊரில் உனக்கு முக்தி கிடைக்கும்’ என்று சொன்னாராம். சீர்காழி, திருவெண்காடு எனச் சுற்றி வந்த பட்டினத்தார், சென்னை திருவொற்றியூர் வந்தபோது அந்த கரும்பு இனித்துள்ளது. அதனால் அங்கே நிரந்தரமாகத் தங்கிவிட்டார். அங்கு மீனவக் குடும்பங்களோடும் குழந்தைகளோடும்தான் அவர் இறுதிக் காலத்தில் வாழ்ந்தார். கோழிகளை மூடும் கூடையை வைத்து பட்டினத்தாரை குழந்தைகள் மூட... அதனை திறந்து பார்த்தபோது சிவன் வடிவம் மட்டுமே இருந்தது என்றும் சொல்வார்கள்.

வாழ்க்கை இனிப்பானது என்ற பொருளில் அவர் அந்தக் கரும்பை கையில் வைத்திருக்கவில்லை. மேலும், அவர் கையில் இருந்தது பேய்க் கரும்பு என்றும் சொல்லப்படுகிறது. இது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் கரும்பு. கசப்புச் சுவை கொண்டது. 'கசப்பான கரும்பு இனிக்கத் தொடங்கும்போது உனக்கு முக்தி கிடைக்கும்’ என்ற அர்த்தத்தில் அந்த குரு சொல்லியிருக்கலாமோ?

பட்டினத்தார் பாடங்களில் ஒன்று: 'ஒரு பொருளை விரும்பத் தொடங்கும்போதே, என்றாவது ஒருநாள் அதனை வெறுக்கவும் வேண்டிவரும் என்பதை உணருங்கள். எனவே, விரும்பும்போதே வெறுத்துவிட்டால் வீணான வருத்தம் வராது!’

பி.ஸ்ரீ.தர்ஷினி, குடந்தை-1.

'பி.ஜே.பி கூட்டணியில் இருந்தாலும் தவறுகளைச் சுட்டிக்காட்டத் தயங்க மாட்டோம்’ என்கிறாரே வைகோ?

பி.ஜே.பி ஆட்சிக்கு வந்ததில் இருந்து ராஜபக்ஷே வருகை, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, இந்தி கட்டாயம், கச்சத்தீவு, காவிரி பிரச்னை, சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் எனப் பல்வேறு பிரச்னைகளில் அவர்களது நிலைப்பாட்டைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டே வந்துள்ளார் வைகோ. இவ்வளவுக்குப் பிறகும் எதற்காக அந்தக் கூட்டணியில் இருக்க வேண்டும்?

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

பயங்கரவாதிகள், போராளிகள் - என்ன வேறுபாடு?

லட்சியமற்றவர்கள்... பயங்கரவாதிகள். கொள்கை தாங்கியவர்கள்... போராளிகள்!

மேட்டுப்பாளையம் மனோகர், சென்னை-18.

'நான் என்னுடைய மாநிலத்தில் கட்சியை வலுப்படுத்துவதில் என்னுடைய நேரத்தைச் செலவு செய்யப்போகிறேன். எனவே மாநிலங்களவை ஸீட் எனக்கு வேண்டாம்’ என்ற ப.சிதம்பரத்தின் முடிவு கட்சிக்குப் பலன் தருமா?

காங்கிரஸ்காரர்கள் ஆண்டுதோறும் ஒழுங்காகச் செய்யும் ஒரு நிகழ்ச்சி, பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள். அன்றைய தினம்கூட வெளியில் வந்து காமராஜர் சிலைக்கு ப.சிதம்பரம் மாலை அணிவித்ததாகத் தெரியவில்லை. அவரது மகன், பிரேசிலில் ஃபுட்பால் மேட்ச் பார்த்துக்கொண்டு இருக்கிறாராம். பிறகு எப்படி காங்கிரஸை வலுப்படுத்தப்போகிறார்?

பொன்விழி, அன்னூர்.

ம.நடராஜன் கைது பற்றி?

எத்தனை தடவை கைதுசெய்வார்கள்? அவரே, 'என்னை நிரந்தரமாக வைத்துக்கொள்ளுங்களேன்’ என்று சொன்னதாகக் கேள்வி!