Published:Updated:

அமைச்சர் எம்.சி.சம்பத் பதவிக்கு நாள் குறிக்கும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்கள்!

அமைச்சர் எம்.சி.சம்பத் பதவிக்கு நாள் குறிக்கும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்கள்!
அமைச்சர் எம்.சி.சம்பத் பதவிக்கு நாள் குறிக்கும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்கள்!

அமைச்சர் எம்.சி.சம்பத் பதவிக்கு நாள் குறிக்கும் ஆளும்கட்சி எம்.எல்.ஏ-க்கள்!

அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பந்தக்கால் நடும் நிகழ்வை அ.தி.மு.க. எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் புறக்கணித்ததால் கட்சிக்காரர்கள் மத்தியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூரில் வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இவ்விழாவுக்கு பந்தக்கால் நடும் விழா இன்று கடலூரில் தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவை அ.தி.மு.க. மேற்கு மாவட்டச் செயலாளரும், கடலூர் எம்.பி. அருண்மொழிதேவன், சிதம்பரம் எம்.பி. சந்திரகாசி மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களான பண்ருட்டி சத்தியா, சிதம்பரம் பாண்டியன், விருத்தாசலம் கலைச்செல்வன், காட்டுமன்னார்கோவில் முருகுமாறன் ஆகியோர் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர்.

புறக்கணிப்பு ஏன் என்று எம்.எல்.ஏ.க்களை தொடர்ப்புக்கொண்டு கேட்டப்போது, "எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா முடிவதற்குள் எம்.சி.சம்பத்தின் அமைச்சர் பதவியை முதல்வர் தூக்கவில்லையென்றால், திருப்பூர் மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில்  பொள்ளாச்சி ஜெயராமனுக்கும், உடுமலை ராதாகிருஷ்ணனுக்கும் எப்படி முதல்வருக்கு முன்னிலையிலேயே மோதல் வெடித்ததோ, அதேபோல் கடலூரிலும் வெடிக்கும். எங்களை மதிக்காதவரை நாங்களும் மதிப்பதாக இல்லை. அமைச்சர் எம்.சி.சம்பத் தலைமையில் நடக்கும் எந்த விழாவாக இருந்தாலும் அதைக் கட்டாயம் புறக்கணிப்போம்" என்றனர் ஆவேசத்துடன்.

அடுத்த கட்டுரைக்கு