Published:Updated:

'இவர்கள் அனைவரும் எங்களிடம் வருவார்கள்'- தமிழிசையின் அடடே கணிப்பு!

குருபிரசாத்
'இவர்கள் அனைவரும் எங்களிடம் வருவார்கள்'- தமிழிசையின் அடடே கணிப்பு!
'இவர்கள் அனைவரும் எங்களிடம் வருவார்கள்'- தமிழிசையின் அடடே கணிப்பு!

நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வுக்கு வருவார்கள் என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

'இவர்கள் அனைவரும் எங்களிடம் வருவார்கள்'- தமிழிசையின் அடடே கணிப்பு!

பீகாரில் பா.ஜ.க ஆதரவுடன் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராகியுள்ளார். குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் 6 பேர் பா.ஜ.க-வில் இணைந்தனர்.  நாட்டில் உள்ள பல மாநிலங்களில் பாஜக ஆட்சி செய்யாத நிலையில், அந்த மாநிலங்களில் தனது ஆதிக்கத்தை செலுத்தும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

இதனிடையே, குஜராத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வில் இணைவதை தடுப்பதற்காக, தங்களது எம்.எல்.ஏ-க்களை பெங்களூரில்  உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்கவைத்துள்ளது காங்கிரஸ். இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இந்நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசியபோது, "காங்கிரஸ் இல்லாத பாரதம் அமைப்போம். குஜராத் மட்டுமல்லாது அனைத்து மாநிலங்களில் இருந்தும் எம்.எல்.ஏ-க்கள் பா.ஜ.க-வுக்கு வருவார்கள். தமிழக வளர்ச்சிக்காக மத்திய அரசு நிறைய செய்ய இருக்கிறது. ஆனால் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் அதனை அரசியலாக்க பார்க்கிறார்" என்று கூறினார்.