

புதுடெல்லி: பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வருகிற 8 ஆம் தேதி தொடங்குகிறது.
ஆகஸ்ட் 8 ஆம் தேதி தொடங்கி, செப்டம்பர் 7-ம் தேதி வரை நடைபெறும் இக்கூட்டத் தொடரில், மொத்தம் 31 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இக்கூட்டத் தொடரில் அசாம் கலவரம், பெட்ரோல் விலை உயர்வு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.
மக்களவை முன்னவராகவும், நிதியமைச்சராகவும் இருந்த பிரணாப் முகர்ஜி குடியரசுத் தலைவரான பின் நடைபெறும் முதல் கூட்டத் தொடர் இது. அவருக்குப் பதிலாக அவை முன்னவராகவும், நிதியமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ள சுஷீல் குமார் ஷிண்டே, எதிர்க்கட்சிகளின் கேள்விக்கணைகளை சமாளிப்பாரா என்பதற்கான சோதனைக் களமாக இந்தக் கூட்டத் தொடர் இருக்கும்.
இக்கூட்டத் தொடரில், சமீபத்தில் அசாமில் நிகழ்ந்த கலவரம், அமர்நாத் யாத்திரையில் ஏராளமான பக்தர்கள் உயிரிழந்தது குறித்து மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
##~~## |