Published:Updated:

நீதிபதிகள் தேர்வில் வன்னியர்களுக்கு முன்னுரிமை: ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை: நீதிபதிகள் தேர்வில் வன்னியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்  என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது காலியாக உள்ள 8 மற்றும் விரைவில் 2  நீதிபதிகள் ஓய்வு பெறுவதால் ஏற்படும் 2  நீதிபதி பணியிடங்களில்,  நீதிபதிகளை  நியமிக்கும் போது வன்னியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர்   கூறியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு  அதாவது 20 இடங்கள் வன்னியர்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தற்போது  ஒரே ஒரு வன்னியர் மட்டுமே நீதிபதியாக உள்ளார்.

##~~##
எனவே நீதிபதிகள் நியமனத்தில் இட ஒதுக்கீட்டு முறையை அறிமுகம் செய்ய  வேணடும்.மேலும் தற்போது 10 நீதிபதிகள் பணியிடங்களில் 3 வன்னியர்களுக்காவது  வாய்ப்பளிக்க வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.