Published:Updated:

அதிமுக ஆட்சியை அகற்ற கஷ்டமிருக்காது: விஜயகாந்த்

விகடன் விமர்சனக்குழு
அதிமுக ஆட்சியை அகற்ற கஷ்டமிருக்காது: விஜயகாந்த்
அதிமுக ஆட்சியை அகற்ற கஷ்டமிருக்காது: விஜயகாந்த்
அதிமுக ஆட்சியை அகற்ற கஷ்டமிருக்காது: விஜயகாந்த்

திருநெல்வேலி: திமுக ஆட்சியை அகற்றப் போராடினோம்.ஆனால், அதிமுக ஆட்சியை அகற்ற கஷ்டமிருக்காது.அது தானாகவே போய்விடும் என்று கூறியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், முதல்வர் ஜெயலலிதா தம் மீது போட்டிருக்கும் அவதூறு வழக்குகளை சந்திக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். .

தேமுதிக சார்பில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பொதுக்கூட்டம் பாளையங்கோட்டை ஜவாஹர் திடலில் நேற்று இரவு நடைபெற்றது.

இதில் நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசிய விஜயகாந்த்" என் மீது அவதூறு வழக்குப் போட்டிருக்கிறார்கள். வழக்குகளைக் கண்டு நான் அஞ்சமாட்டேன். அதனைச் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன்.பத்திரிகைகள், தொலைக்காட்சிகளில் வந்த செய்திகள் அடிப்படையில்தான் நான் பேசுகிறேன்.

அவர்கள் தவறு செய்யவில்லை என்கிறார்கள்;அப்படி தவறு செய்யவில்லை என்றால், கடந்த முறை அவர்களுக்கு ஏன் மக்கள் ஓட்டு போடவில்லை?முந்தைய ஆட்சியில் இருந்தவர்களும் தவறு செய்தார்கள்.இவர்களும் தவறு செய்கிறார்கள்.

அதிமுகவினால்தான் தேமுதிக வெற்றி பெற்றது என்கிறார்கள்.தேமுதிகவினால்தான் அதிமுக வெற்றி பெற்றது.

வற்றாத ஜீவநதியான தாமிரவருணி வற்றிவிட்டது. அதற்கு மணல் கொள்ளைதான் காரணம்.மணலைச் சுரண்டி எடுத்தால் நீரோட்டம் எப்படி இருக்கும்? தமிழகத்தில் உள்ள எந்த ஆற்றிலும் மணல் எடுக்கக்கூடாது என சட்டம் போட வேண்டும்.

உடன்குடி மின்திட்டத்தை தனது நேரடிப் பார்வையில் செயல்படுத்துவதாக முதல்வர் சொன்னார்.ஆனால்,அங்கு இதுவரை எந்தப் பணியும் நடைபெறவில்லை. இதையெல்லாம் நான் சொன்னால் தவறு;என் மீது வழக்கு போடுகிறார்கள்.

அதிமுக ஆட்சியை அகற்ற கஷ்டமிருக்காது

இன்று அணுசக்தி எதிர்ப்பு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.கூடங்குளம் பகுதி மக்கள் தொடர்ந்து அணு உலைக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.மக்களின் பயத்தைப் போக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிலை.மக்களின் பயத்தைப் போக்கிவிட்டு எதையும் செய்யுங்கள்.மதுரையில் குவாரிகளில் கிரானைட் கொள்ளை தொடர்பாக ஏன் முன்பே நடவடிக்கை எடுக்கவில்லை?

அதிமுக ஆட்சியை அகற்ற கஷ்டமிருக்காதுமாணவர்களின் பணத்தைக் கையாடல் செய்ததாக தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.அது போதாது அவர்கள் சம்பாதித்த பணம் அனைத்தையும் பறிக்க வேண்டும்.

தேமுதிக ஆட்சிக்கு வந்தால் லஞ்சம்,ஊழல் இருக்காது.ரேஷன் பொருள்கள் வீடு தேடி வரும்.

திமுக ஆட்சியை அகற்றப் போராடினோம்.ஆனால், அதிமுக ஆட்சியை அகற்ற கஷ்டமிருக்காது.அது தானாகவே போய்விடும்.

அதிமுக எம்.எல்.ஏ. தேமுதிகவுக்கு வர விருப்பம்

அதிமுகவை சேர்ந்த எம்.எல்.ஏ. ஒருவர் தேமுதிகவில் சேருவதற்கு விருப்பம் தெரிவித்து என்னிடம் பேசினார்.நான்தான் பாதியில் வர வேண்டாம் என அவரிடம் கூறிவிட்டேன்.பாதியில் கட்சி மாறுபவர்களை நான் நம்பமாட்டேன்" என்று கூறினார்.