Published:Updated:

ஜெயலலிதாவை விரைவில் சந்திப்பேன்: மதுரை ஆதீனம்

ஜெயலலிதாவை விரைவில் சந்திப்பேன்: மதுரை ஆதீனம்
ஜெயலலிதாவை விரைவில் சந்திப்பேன்: மதுரை ஆதீனம்
ஜெயலலிதாவை விரைவில் சந்திப்பேன்: மதுரை ஆதீனம்

கும்பகோணம்:  தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை விரைவில் சந்திக்க உள்ளதாக  மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கும்பகோணத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,"
சுவாமி தரிசனம் செய்வதற்காக மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான திருப்புறம்பியம் கோவிலுக்கு வந்துள்ளோம். கடந்த 4 ஆம் தேதி கச்சனம் கோவிலுக்கு சென்றேன். நான் இங்கு வருவது குறித்து தகவல் அறிந்த காசிமட அதிபர் என்னை சந்தித்து நலம் விசாரிக்க வந்தார்.நித்யானந்தா கயிலாய மலைக்கு சென்றிருப்பதால் அவர் வரவில்லை.
 
அவர் தொடர்பான கேள்விகளை அவரிடம் தான் கேட்க வேண்டும்.அவர் மீது உள்ள குற்றச்சாட்டுகளுக்கான வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் என்னால் கருத்து சொல்ல இயலாது.என்னை வசியப்படுத்தி விட்டனர் என்று கூறுகின்றனர்.என்னை யாரும் வசியப்படுத்த முடியாது.மடத்து சொத்துக்கள்,கோவில் நிர்வாகம் அனைத்தும் என்னிடம்தான் உள்ளது.
 
மதுரை ஆதீன மடத்தில் நித்யானந்தாவை சுற்றி உள்ளவர்களால் சில மரபுகள் காக்கப்படவில்லை.அதில் திருத்தம் கொண்டு வருகிறோம்.மீண்டும் நித்யானந்தா மரபுபடி வருவாரா? என்பது இறைவன் கையில்தான் உள்ளது.மதுரை ஆதீனத்தில் மூத்த சன்னிதானங்களின் படங்கள் அகற்றப்பட்டிருந்தன.விரைவில் அந்த படங்கள் மீண்டும் வைக்கப்படும்.

பிற மட ஆதீனங்கள் கூடி நித்யானந்தாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.அவர்களுக்கும், எனக்கும் எந்த விரோதமும் இல்லை.தருமை ஆதீனத்துக்கும்,எங்களுக்கும் இடையே எந்த விரோதமும் இல்லை.நான் நாளை வேண்டுமானாலும் போய் அவர்களை சந்தித்து பேசும் அளவுக்கு நல்ல உறவில் தான் உள்ளோம்.
 

##~~##
மதுரை ஆதீனத்துக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமித்து வைத்திருப்பவர்கள் மீது படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.அவர்களே சொத்துக்களை கொடுத்து விடுவார்கள்.தமிழக மக்களுக்கு அமைதியான வாழ்வு கிடைக்க இறைவனை பிரார்த்தனை செய்ய வேண்டும்.
 
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார்.அவரை சந்திக்க இருப்பதாக ஏற்கனவே கூறியிருந்தேன்.விரைவில் அவரை சந்திப்பேன்.புனித பயணம் செல்வதற்கு தமிழக அரசு நிதி உதவி வழங்குவதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.