Published:Updated:

விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கக் கூடாது. போர்கொடி தூக்கும் காங்கிரஸார்!

க.பூபாலன்
விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கக் கூடாது. போர்கொடி தூக்கும் காங்கிரஸார்!
விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கக் கூடாது. போர்கொடி தூக்கும் காங்கிரஸார்!

விடுதலைப்புலிகள் மீதான தடையைக் கடந்த வாரம் ஐரோப்பா யூனியன் நாடுகள் நீக்கின. அதேபோல இந்தியாவும் நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர் காங்கிரஸார்.

இதுகுறித்து காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.அழகிரி, "விடுதலைப்புலிகளால் ஐரோப்பா யூனியன் நாடுகளுக்கு அவ்வளவாக பாதிப்பில்லை. ஆனால், இந்தியாவுக்கு பாதிப்பு அதிகம். காஷ்மீரில் செயல்படும் தீவிரவாதிகளை காஷ்மீர் மக்களின் நலனோடு ஒப்பிடக்கூடாது. அதேபோல விடுதலைப் புலிகளை இலங்கைத் தமிழர்களின் நலனோடு இணைக்கக்கூடாது. தீவிரவாதிகள் எப்போதும் மக்கள் நலனுக்கு எதிரானவர்கள் என்பது, "வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்" என்று பிரகடனப்படுத்திய தி.மு.க-வுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.


இலங்கைத் தமிழர்களின் நலனைப் பாதுகாக்க, அவர்களுக்காக போராட, யாழ்பாணத்தில் பெரியவர் சம்பந்தம் தலைமையில் மிக வலுவான ஜனநாயக இயக்கம் உயிர்ப்போடு உள்ளது. இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசின் நிலையே தி.மு.க-வின் நிலை என கருணாநிதி தெளிவாகக் கூறியுள்ளார். எனவே, தி.மு.க-வின் நிலையில் மாற்றம் வரும் என நான் நினைக்கவில்லை. ஒருகாலத்தில் கருணாநிதியையே  அப்புறப்படுத்திவிட்டு, அந்த இடத்தில் வேறு ஒருவரை அமரவைக்க விடுதலைப் புலிகள் முயற்சித்ததாக கருணாநிதியே அறிவித்திருக்கிறார்.

அதனால், தி.மு.க-வே பிளவுபட்டது ஸ்டாலினுக்குத் தெரியாதா? இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்காகப் போராட, தாய்த் தமிழகம் தயாராக உள்ளது. அதுவும் ஜனாநாய வழியில். அதனால் விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கக் கூடாது" என்றார்.