Published:Updated:

உ.பி.: மாயாவதி பூங்காக்களை விட பெரிய பூங்காவுக்கு அடிக்கல்!

விகடன் விமர்சனக்குழு
உ.பி.: மாயாவதி பூங்காக்களை விட பெரிய பூங்காவுக்கு அடிக்கல்!
உ.பி.: மாயாவதி பூங்காக்களை விட பெரிய பூங்காவுக்கு அடிக்கல்!
உ.பி.: மாயாவதி பூங்காக்களை விட பெரிய பூங்காவுக்கு அடிக்கல்!

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் மாயாவதி ஆட்சி காலத்தில்   அமைக்கப்பட்டதைவிட  அதிக பிரமாண்டமாக, 300 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக உள்ள  பூங்காவுக்கு அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் அடிக்கல் நாட்டியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் மாயாவதி தலைமையிலான முந்தைய  ஆட்சியில், மக்கள் வரிப்பணத்தில் பெரிய பெரிய பூங்காக்கள் அமைத்ததும்,  சாலையோரத்தில் சிலைகள் அமைத்ததும் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகின.சட்டசபை  தேர்தலில் அவரது கட்சி தோல்வியடைந்ததற்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்பட்டது.

இந்நிலையில்,உத்தரப்பிரதேசத்தில் புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள சமாஜ்வாடி கட்சியின்  அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசு,இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்ற  எதிர்பார்க்கப்பட்டது.

##~~##
ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக அவரும் மாயாவதிக்கு போட்டியாக பிரமாண்ட  பூங்காக்களை நிறுவ முடிவு செய்துள்ளார்.
இதன் முதல்கட்டமாக லக்னோவின் கோம்தி நகரில் சுமார் 300 ஏக்கர் நிலப்பரப்பில்  உருவாக உள்ள ஜனேஷ்வர் மிஷ்ரா பூங்காவுக்கு முதல்வர் அகிலேஷ் யாதவ்,இன்று   அடிக்கல் நாட்டினார்.
அகிலேஷின் இந்த செயலுக்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.