Published:Updated:

மீண்டும் துணை ஜனாதிபதியாக ஹமீத் அன்சாரி தேர்வு!

மீண்டும் துணை ஜனாதிபதியாக ஹமீத் அன்சாரி தேர்வு!
மீண்டும் துணை ஜனாதிபதியாக ஹமீத் அன்சாரி தேர்வு!
மீண்டும் துணை ஜனாதிபதியாக ஹமீத் அன்சாரி தேர்வு!

புதுடெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் ஹமீத் அன்சாரி வெற்றி பெற்றுள்ள நிலையில், அவர் அப்பதவிக்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இன்று காலை 10 மணிக்கு துணை ஜனாதிபதிக்கான வாக்குப் பதிவு தொடங்கியது. இத்தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் தற்போதைய துணை ஜனாதிபதியான ஹமீது அன்சாரியும், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்  ஜஸ்வந்த் சிங்கும் போட்டியிட்டனர்.

மாநிலங்களவையில் உள்ள அறை எண் 63-ல் உறுப்பினர்கள் ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்ள எம்.பி.க்கள் துணை ஜனாதிபதி தேர்தலில் ஓட்டளித்தனர்.

மாலை எண்ணப்பட்ட வாக்குப் பதிவில், தற்போதைய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி 490 வாக்குகளும், ஜஸ்வந்த் சிங் 238 வாக்குகளும் பெற்றனர். 8 ஒட்டுக்கள் செல்லாத ஒட்டுக்களாக அறிவிக்கப்பட்டன.

252 ஒட்டுக்கள் வித்தியாசத்தில் ஹமீத் அன்சாரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படது.

துணை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற 377 வாக்குகளே தேவை. ஹமீத் அன்சாரி 490 வாக்குகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

##~~##