வி.எஸ்.மோகன்ராஜ், மணக்குப்பம்.

தமிழ் பண்பாட்டுக்கு முரணான தகவலைத் தரும் வடநாட்டுப் பெண் குஷ்பு, தமிழ் மொழிக்கோ, தமிழகத்துக்கோ செய்த சாதனை என்ன?

தமிழ்நாட்டிலேயே பிறந்த தமிழ் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் தமிழ் மொழிக்கும் தமிழகத்துக்கும் சாதனை செய்து முடித்துவிட்டார்களா என்ன? யாரிடம் இருந்து எதனை எதிர்பார்க்க வேண்டுமோ, அதனை எதிர்பார்ப்பது மட்டுமே சரியானது!

லட்சுமி காந்தம், வேலூர் (நாமக்கல்)

ஸ்டாலின் - அழகிரி இடையே சமாதானப் படலம் நடக்கிறதே, வெற்றி கிட்டுமா?

அவர்கள் இருவருக்கும் எப்போது பிரச்னை தொடங்கியதோ, அப்போது முதலே சமாதானப் படலமும் நடக்கிறது. ஆனால், தீர்வுதான் கிட்டவில்லை.

சமீபத்தில் மதுரை சென்றிருந்தார் ஸ்டாலின். அவரை வரவேற்று ஒட்டப்பட்ட ஒரு போஸ்டரில் ஸ்டாலின், அழகிரி இருவரது படமும் சேர்த்து இருந்தது. இதனைப் பார்த்து ஆத்திரப்பட்ட ஸ்டாலின், மாவட்ட நிர்வாகிகளிடம் கொந்தளித்துவிட்டாராம். எனவே, சமாதானம் எல்லாம் சாத்தியம் இல்லை. அழகிரி அமைதியாக தி.மு.க-வை விட்டு ஒதுங்கிவிட வேண்டும் என்பதுதான் ஸ்டாலின் வைக்கும் நிபந்தனையாக இருக்கும். இதனை அழகிரி எப்படி ஏற்பார்?

இரா.நெல்லை அறிவரசு, ஆவடி.

குஷ்பு எந்த அரசியல் கட்சியில் சேருவார்?

எந்த அரசியல் கட்சியிலும் இணையும் திட்டம் இப்போதைக்கு அவருக்கு இல்லை!

வி.எம்.செய்யது புகாரி, அதிராம்பட்டினம்.

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அவர் நிரபராதி என்று தீர்ப்பு வெளியானால், அதன் பிறகு தமிழக அரசியலில் ஏற்படும் மாற்றம் என்னவாக இருக்கும்?

ஜெயலலிதா நிரபராதி என்று தீர்ப்பு வெளியானால், தமிழக அரசியலில் எந்த மாற்றமும் ஏற்படாது. இப்படியேதான் இருக்கும். ஜெயலலிதாவுக்குத் தண்டனை தரப்பட்டால்தான் அரசியல் மாற்றம் ஏற்படும். வேறு ஒருவரை முதலமைச்சராகக் கொண்டுவர வேண்டும். அது சசிகலா குடும்பத்தைச் சேர்ந்தவரா அல்லது மற்ற ஒருவரா என்பதில் பிரச்னை ஆகும். தண்டனை பெற்றவரைத் தலைவராகக் கொண்ட கட்சி என்று, தி.மு.க பிரசாரம் செய்யும். ஜெயலலிதாவின் செயல்பாடுகளில் சுணக்கம் ஏற்படும். எனவே, அவர் தண்டனை பெற்றால்தான் அரசியல் மாற்றம் ஏற்படும். விடுதலையானால் எந்த மாற்றமும் ஏற்படாது. விழாக்கள் கொண்டாடப்படலாம்!

சம்பத்குமாரி, பொன்மலை.

'அடுத்த ஜென்மத்தில் போயஸ் தோட்டத்தில் புல்லாகப் பிறக்க வேண்டும்’ என்று பேசியிருக்கிறாரே அமைச்சர் செந்தூர் பாண்டியன்?

அறநிலைய அமைச்சர் என்பதால், பக்தி பரவசத்தில் பேசியிருப்பார். புல்லை வளர வளர வெட்டிவிடுவார்கள் என்பதை அமைச்சர் அறிவார்தானே!

தாமஸ் மனோகரன், புதுச்சேரி-4.

'அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை’ என்ற பழமொழி தோன்றியது ஏன்? எதனால்?

தனித்து நிற்க முடியாமல், கூட்டணி வைத்து தேர்தலைச் சந்திக்கும் நிலைமை வந்த பிறகுதான் இந்தப் பழமொழிகள் வந்தன. அண்ணாவுடன் சேர்ந்து 67-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காமராஜரை எதிர்த்த ராஜாஜி, 71 தேர்தலில் காமராஜருடன் சேர்ந்து தி.மு.க-வை எதிர்த்தார். எமர்ஜென்சியைக் கொண்டுவந்து தி.மு.க-வினரைக் கைதுசெய்து ஓர் ஆண்டு சிறையில் வைத்தார் இந்திரா. மூன்று ஆண்டுகள் கடந்ததும் இந்திராவும் கருணாநிதியும் ஒரே மேடைக்கு வந்தார்கள். கருணாநிதியை வைகோ பேசாத பேச்சா? 99 தேர்தலில் இருவரும் கைகோத்தார்கள். பொடாவில் அவரை யார் கைது செய்தார்களோ அதே ஜெயலலிதாவுடன் 2006 தேர்தலில் வைகோ கூட்டுவைத்தார். விஜயகாந்த் - ஜெயலலிதா மோதல் அனைவரும் அறிந்தது. ராமதாஸுக்கும் கருணாநிதிக்கும், ராமதாஸுக்கும் ஜெயலலிதாவுக்குமான மோதலும் கூட்டணியும் மிகப்பெரிய கதை. இவர்கள் அனைவருக்கும் கைகொடுப்பது இந்தப் பழமொழிதான்!

சி.கார்த்திகேயன், சாத்தூர்.

பிரதமராக மன்மோகன் சிங் இருப்பதற்கும் மோடி இருப்பதற்கும் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா?

இதுவரை இல்லை. ப.சிதம்பரம் வரவேற்கும் பட்ஜெட்டைத்தான் அருண்ஜெட்லி வாசித்தார். ஜனாதிபதி உரைக்கு பதில் அளித்து பேசியதைத் தவிர நாடாளுமன்றத்தில் மோடி எந்தப் புதிய கருத்தும் சொல்லவில்லை. வெளிநாட்டுப் பயணங்களில் மும்முரமாக இருக்கிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தும் தாழ்ந்தும் போக்கு காட்டிக்கொண்டு இருக்கிறது. மீனவர்கள் நித்தமும் இழுத்துச் செல்லப்படுகிறார்கள். காஷ்மீரில் பாகிஸ்தான் ஊடுருவல் குறையவில்லை. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆறு மாதங்களாவது அவகாசம் கொடுப்போம் புதிய பிரதமருக்கு!

பி.சாந்தா, மதுரை-14.

'உத்தரப்பிரதேச முதல்வர் பதவிக்கு வருண் காந்திதான் பொருத்தமானவர்’ என்று மேனகா காந்தி சொல்லியிருப்பது பற்றி?

எல்லா பதவிகளுக்கும் வீட்டுக்குள் இருந்தே ஆளைத் தேடுவதுதானே அரசியல்வாதிகளின் பழக்கவழக்கம். அதற்கு மேனகா மட்டும் விதிவிலக்கா என்ன?

வி.எஸ்.ராமு, செம்பட்டி.

தலைவர்கள், கட்சித் தலைவர்கள் என்ன வித்தியாசம்?

அடுத்த தேர்தலைப் பற்றி கவலைப்படுபவர்கள் கட்சித் தலைவர்கள். அடுத்த தலைமுறையைப் பற்றி சிந்திப்பவர்கள் தலைவர்கள்!

எஸ்.ரமேஷ், திருவானைகாவல்.

வரும் சட்டமன்றத் தேர்தலில் 'கலைஞர் தி.மு.க’ என்ற கட்சியை அழகிரி தொடங்கினால், அவரது எதிர்காலம் எப்படியிருக்கும்?

அவருக்குப் புதிய கட்சி தொடங்கும் திட்டம் இருப்பதாகத் தெரியவில்லை. அப்படி இருந்தால் அவர் எப்போதோ தொடங்கியிருப்பார். தி.மு.க-விலேயே இருந்து, தான் நினைப்பதை அடைவதுதான் அவரது திட்டம்!