Published:Updated:

தேர்தல் ஆணையத்துக்கு டி.டி.வி.தினகரன் பேரவையினரின் கேள்வி   

செ.சல்மான் பாரிஸ்
தேர்தல் ஆணையத்துக்கு டி.டி.வி.தினகரன் பேரவையினரின் கேள்வி   
தேர்தல் ஆணையத்துக்கு டி.டி.வி.தினகரன் பேரவையினரின் கேள்வி   

தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் அனுப்பும் வித்தியாசமான போராட்டத்தை தினகரன் ஆதரவாளர்கள் இன்று நடத்தி அதிர வைத்துளார்கள். வருகிற நான்காம் தேதியிலிருந்து அரசியல் செயல்பாட்டை மீண்டும்  தொடங்க இருப்பதாக டி.டி.வி.தினகரன் அறிவித்துள்ளார். இதனால் அவருடைய ஆதரவாளர்கள் உற்சாகமாகியுள்ளார்கள். 

'இந்திய தேசியத்தலைவர் மக்கள்செல்வர் டி.டி.வி. தினகரன் பேரவை' என்ற அமைப்பின்  மதுரை நிர்வாகிகள்  புதுசு புதுசாக ஏதாவது செய்து  வருகிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மதுரை வந்தபோது சசிகலா, தினகரன் படத்துடன் பேனர் வைத்தார்கள். கர்நாடக டி.ஐ.ஜி ரூபாவுக்கு எதிராக போஸ்டர் ஒட்டினார்கள். தேர்தல் கமிஷன் வழக்கில் டெல்லி போலீஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் தினகரன் பெயர் குறிப்பிடாததற்கு இனிப்பு வழங்கினார்கள். 

இந்த நிலையில்தான்,  ''இரட்டை இலையை முடக்கி வைத்திருப்பதன் காரணம் என்ன?'' என்று, தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடிதம் அனுப்புவதை ஒரு போராட்டமாக நடத்தினார்கள். ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள தபால் நிலையத்தில்  ஐம்பது கடிதங்களை அனுப்பினார்கள். இதுபோல  அனைத்து ஊர்களிலிருந்தும் கடிதம் அனுப்ப உள்ளதாக தெரிவித்தார்கள். இப்படி தேர்தல் கமிஷனிடம் கேட்பது முறைதானா? இதற்கு தேர்தல் கமிஷன் பதில் தருமா? என்று தெரியவில்லை.