Published:Updated:

கரூரில் அம்மா பூங்காவைத் திறந்த அமைச்சர்..!

துரை.வேம்பையன்
கரூரில் அம்மா பூங்காவைத் திறந்த அமைச்சர்..!
கரூரில் அம்மா பூங்காவைத் திறந்த அமைச்சர்..!

கரூர் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா பூங்காவை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்துவைத்தார்.             


கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், திருகாம்புலியூர் ஊராட்சியில் உள்ள மாயனூரில், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 49.22 லட்சம் மதிப்பில் அம்மா பூங்கா அமைக்கப்பட்டது. அந்தப் பூங்காவை, கரூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராஜ் தலைமையிலும், கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ., கீதா முன்னிலையிலும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். 
அந்த விழாவில் பேசிய அவர், 'மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில், மாயனூர் காவிரிக்கரையில் உள்ள செல்லாண்டியம்மன் திருக்கோயில் அருகே இந்தப் பூங்கா சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்ட மக்களின் பொழுதுபோக்கிற்காகவும் ஆடிப் பெருக்கு விழா கொண்டாடுவதற்காகவும் அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கரூர் மாவட்டத்துக்கு சுற்றுலாத் தலம் இல்லாத குறையைப் போக்கும் வகையில் இந்தப் பூங்கா அமைந்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா, தமிழ்நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.

அக்டோபர் 4-ம் தேதி, கரூர் மாவட்டத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ளது. அதன் தொடக்கமாக, இன்று அம்மா பூங்காவில் எம்.ஜி.ஆரின் பெயரில் சிறிய அளவிலான கலையரங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் பூங்காவில், அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இங்கு வரும் பொதுமக்கள், அரசுத் திட்டங்களைத் தெரிந்துகொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, ஊரகவளர்ச்சித்துறை, வருவாய்த்துறை உட்பட 22 துறை சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது பாராட்டத்தக்கது' என்று தெரிவித்தார்.