Published:Updated:

’ஆமாம்.. நடப்பது ஜெயலலிதா ஆட்சிதான்!’ - அமைச்சர் செல்லூர் ராஜு சீற்றம்

’ஆமாம்.. நடப்பது ஜெயலலிதா ஆட்சிதான்!’ - அமைச்சர் செல்லூர் ராஜு சீற்றம்
’ஆமாம்.. நடப்பது ஜெயலலிதா ஆட்சிதான்!’ - அமைச்சர் செல்லூர் ராஜு சீற்றம்

ஸ்ரீ வைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ ’’சண்முகநாதன் தெரியாமல் வழிதவறி சென்றுவிட்டார்’’ என தூத்துக்குடியில் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள பண்ணைப் பசுமைக்கடையை ஆய்வுசெய்த அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘’ ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்.எல்.ஏ சண்முகநாதன், தன்னிடம் அணி மாறுவதற்காக ரூ.5 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக தெரிவித்துள்ளார். ஆனால், தன்னிடம் பேரம் பேசியது யார்? என்பதைப்பற்றி அவர் ஏதும் கூறவில்லை. அவர் வழி தவறி சென்றுவிட்டார். விரைவிலேயே எங்களுடன் இணைந்து விடுவார். இரண்டு அணிகளும் விரைவில் இணையும். அதேபோல அணிமாறிச் சென்ற எம்.எல்.ஏ-க்களும், தொண்டர்களும் அணிகள் இணையும்போது இணைந்து விடுவார்கள்.  முதல்வரையோ, அமைச்சர்களையோ யார் வேண்டுமானாலும் சந்தித்துப் பேசலாம். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வழியிலேயே நடந்து வரும் எங்களது ஆட்சியை எவராலும் குறைசொல்ல முடியாது. ஆனால், எதற்கெடுத்தாலும் குறை சொல்வதற்கென்றே எதிர்கட்சித் தலைவர் என ஒருவர் உள்ளார்.  யார் என்ன சொன்னாலும் எங்கள் ஆட்சி மக்களுக்கான ஆட்சி என்பது மக்களுக்குத் தெரியும். அடுத்த 2021 சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.கவே ஆட்சியைக் கைப்பற்றும்'' என்றார்.