டெல்லி செங்கோட்டையில் 2014 ஆகஸ்ட் 15 அன்று கொடி ஏற்றப்போவது யார்? - இதுதான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கேள்வியாக எழுந்து நின்றது. நரேந்திர மோடி கோட்டையில் கொடி ஏற்றிவிட்டார்.

பிரதமர் ஆவதற்கு முன்புவரை சலிக்காமல் பேசிவந்த மோடி, பிரதமர் ஆனதும் சாந்த சொரூபியாக ஆகிவிட்டார். நாடாளுமன்றத்திலும் அதிகம் பேசவில்லை. ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து நடந்த விவாதங்களின்போதும் அமைதியாக இருந்தார். எனவே, எல்லோரும் ஆகஸ்ட் 15-ம் தேதிக்காகத்தான் காத்திருந்தனர்.

மோடியும் சுதந்திர தின உரைக்காகவே காத்திருந்தார்போல. கம்பீரமான காவி நிறத் தலைப்பாகையுடன் செங்கோட்டை கொத்தளத்துக்கு வந்தார். மோடியின் முதல் சுதந்திர தின பேச்சைக் கேட்க பாதுகாப்புக் கெடுபிடிகள், போக்குவரத்து இடையூறுகளை எல்லாம் தாண்டி 35 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் திரண்டனர். இதற்காக முதன்முறையாக எல்.சி.டி ஸ்கிரீன் வசதியும் செய்யப்பட்டு இருந்தது. இதற்கு டெல்லி மெட்ரோவின் வசதியும் இலவச பயண அனுமதியும் உதவின. பொதுவாக சுதந்திர தினத்தின்போது டெல்லியில் உள்ள வெளிநாட்டு தூதரகத்தில் இருந்து சுமார் 50 விண்ணப்பங்கள் வரும். இதில் 35 பேர் வருவார்கள். ஆனால் இந்த முறை 153 நாட்டு தூதரகங்களில் இருந்து விண்ணப்பங்கள். 144 பேருக்கு அழைப்பு அனுப்பி வைக்கப்பட்டன.

செங்கோட்டைக்கு எதிரே இருக்கும் நெருக்கடியான சாந்தினி சௌக், ஜும்மா மசூதி பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. குண்டு துளைக்காத கண்ணாடிக் கூண்டுக்குள் இருந்துதான் கடந்த பல ஆண்டுகளாக பிரதமர்கள் பேசுவது வழக்கம். நரேந்திர மோடி, கண்ணாடிக் கூண்டு மேடையை அகற்றும்படி கூறிவிட்டார்.

அணி வகுப்பு மரியாதை, கொடியேற்றுதல் முடித்துவிட்டு, உரையாற்றிய பின்னர் பிரதமர்கள் காரில் ஏறுவதற்கு முன்பு பள்ளி குழந்தைகளை நோக்கி கை அசைத்துவிட்டுப் போவது வழக்கம். பிரதமர் மோடியோ காரை நிறுத்தி, கோட்டைக்கு முன் அமர்ந்திருக்கும் பள்ளி குழந்தைளோடு கைகுலுக்கி ஆனந்தப்பட வைத்தார்.

மோடி அணிந்துவந்த தலைப்பாகை எந்த மாநிலத்தைச் சேர்ந்தது என்பது பலருக்குப் புரியவில்லை. ராஜஸ்தானிகள் 'எங்கள் டர்பன்’ என்கின்றனர். வேறு சிலர் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தது என்கின்றனர். ''பொதுவாக இதுபோன்ற தலைப்பாகை வட இந்தியாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் அணிவது வழக்கம். மோடி கடந்த தேர்தலில் பரபரப்பு பிரசாரங்களின்போது சூட்டப்பட்டதை எடுத்து கம்பீரமாக அணிந்து வந்துவிட்டார்'' என்கிறார்கள். அதுவும் காவியும் பச்சையும் கலந்த நிறம் அனைவரையும் ஈர்த்தது.

மோடி தனது 65 நிமிடப் பேச்சை எழுதிவைத்துப் படிக்கவில்லை. இதுவே அதிகார மட்டத்தில் இருப்பவர்களுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது. ''ஒரு முதலமைச்சராக இருந்து டெல்லிக்கு வந்து கடந்த இரண்டரை மாத ஆட்சி அனுபவத்தை பகிர்ந்துகொண்டதோடு, மீதமுள்ள தனது ஆட்சி எப்படிப்போகும் என்பதையும் பேசி நிறுத்தினார். சுமார் 56 விவகாரங்களை அலசி, 10-க்கும் அதிகமான புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.

பாலியல் பலாத்காரம் என்றால் போலீஸையே குற்றம் சொல்லிக்கொண்டு இருக்கும் சமுதாயத்தைப் பார்த்தும் கேள்வி கேட்டார். ''உங்களுடைய பத்து வயசு பெண் குழந்தை வெளியே போனால் எங்கே போகிறாய், எப்போது திரும்பி வருவாய் என்று கேட்கிறீர்கள். ஆனால், உங்கள் ஆண் மகன் எங்கே போகிறான், என்ன செய்கிறான், யாரைப் பார்க்கிறான், யார் அவனுடைய நண்பர்கள் என்று பார்ப்பதும் இல்லை. கேட்பதும் இல்லை. நாட்டில் நடக்கும் பல பலாத்காரங்களுக்குக் காரணமான இளைஞர்கள் சில பெற்றோர்களின் மகன்கள்தான். இந்தப் பெற்றோர்கள் இந்த ஆண்மகன்களை முறையாகக் கண்காணித்துக் கண்டித்துத் தடுத்தால் பலாத்காரம் நடக்காதே?'' என்று லாஜிக்காக பேசினார் மோடி.

''நான் பிரதம அமைச்சர் அல்ல. நாட்டின் முதல் சேவகன். எனக்கு கீழே இருப்பவர்கள் 12 மணி நேரம் பணியாற்றினால், நான் 15 மணி நேரம் இந்த நாட்டுக்குப் பணியாற்றும் முதல் சேவகன்'' என்று சொல்லிவிட்டுப் போனார் மோடி.

சேர்த்துவைத்துப் பேசிவிட்டார்!

- சரோஜ் கண்பத்