Published:Updated:

குஜராத்தில் ராகுல் காந்தி கார்மீது தாக்குதல்!

குஜராத்தில் ராகுல் காந்தி கார்மீது தாக்குதல்!
குஜராத்தில் ராகுல் காந்தி கார்மீது தாக்குதல்!

குஜராத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிடச் சென்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கார்மீது சிமென்ட் கற்கள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

குஜராத்தில் ராகுல் காந்தி கார்மீது தாக்குதல்!

பனஸ்கந்தா மாவட்டத்தின் தானேரா நகரில் மக்களைச் சந்திக்கச் சென்ற ராகுலுக்கு, பா.ஜ.க-வினர் கறுப்புக்கொடி காட்டியும், பிரதமர் மோடிக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பியும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ராஜஸ்தானில் வெள்ள பாதிப்புப் பகுதிகளைப் பார்வையிட்ட பின்னர், குஜராத் மாநிலத்துக்கு வருகை தந்த ராகுலின் கார்மீது சிமென்ட் கற்கள் வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் ராகுல் காந்தி, பெரிய காயங்கள் இன்றி தப்பியதாகவும், பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்களே திட்டமிட்டு தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரான ரந்தீப்சிங் சுர்ஜேவாலா குற்றம்சாட்டியுள்ளார். மேலும், ராகுலின் கார் தாக்கப்பட்டது போன்ற புகைப்படங்களையும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

- தினேஷ் ராமையா