Published:Updated:

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் அஞ்சல் அட்டைகள் வெளியீடு

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் அஞ்சல் அட்டைகள் வெளியீடு
அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் அஞ்சல் அட்டைகள் வெளியீடு

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமின் நினைவுகளைப் போற்றும் வகையில், இந்திய அஞ்சல் துறையினர் கலாமின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் அஞ்சல் அட்டைகளை வெளியிட்டு அசத்தியுள்ளனர்.


தென்கோடி முனையான ராமேஸ்வரத்தில் பிறந்து, தனது அபரீதமான உழைப்பாலும் அரிய சாதனைகளாலும் நாட்டின் முதல் குடிமகனாகவும், விண்வெளி நாயகனாகவும் புகழப்பட்டவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம். மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் ஆதர்ஷ நாயகனாகக் கருதப்படும் கலாம், கடந்த  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜூலை 27-ம் தேதி மறைந்தார். 

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் அஞ்சல் அட்டைகள் வெளியீடு


 

அவர் மறைந்தாலும் அவரது எண்ணங்களைத் தொடர்ந்து எடுத்துச்செல்லும் வாரிசுகளாக மாணவர்களும் இளைஞர்களும் இயங்கி வருகின்றனர். கலாமின் சேவையினால் பெருமைபெற்ற இந்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் தனது பங்களிப்பாக, ராமேஸ்வரத்தில் டாக்டர் அப்துல் கலாம் தேசிய நினைவகத்தை அமைத்துள்ளது. இதேபோல, ஒடிசாவில் உள்ள தீவு ஒன்றுக்கு அப்துல் கலாமின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதேபோல பல்வேறு மாநிலங்கள் அப்துல் கலாமின் நினைவாகப் பல நிறுவனங்களுக்கு அவரது பெயரைச் சூட்டியதன்மூலம் அவருக்கு உரிய அஞ்சலியைச் செலுத்தியுள்ளன.

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் அஞ்சல் அட்டைகள் வெளியீடு


 

இந்நிலையில், இந்திய அஞ்சல்துறையும் தனது பங்காக அப்துல் கலாமுக்கு சிறப்பு அஞ்சல்தலை மற்றும் அஞ்சல்உறை வெளியிட்டது. தற்போது அவற்றை விஞ்சும் வகையில், அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் புகைப்படங்களுடன்கூடிய அஞ்சல் அட்டைகளை வெளியிட்டு அசத்தியிருக்கிறது.  'அப்துல் கலாம் அஞ்சல் கிஃப்ட் பேக்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொகுப்பினுள் கலாமின் சிறுவயது முதல் அவரது நினைவிடம் வரையிலான படங்கள் வண்ணமயமாக அச்சிடப்பட்டுள்ளன. 

அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் அஞ்சல் அட்டைகள் வெளியீடு


 

இந்த கிஃப்ட் பேக்கில் உள்ள அஞ்சல் அட்டைகளில், கலாமின் கண்டுபிடிப்புகளான ராக்கெட்டுகள், ஏவுகணை மற்றும் அவரது பல்வேறு தொடர்புடைய அஞ்சல்தலைகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்த அஞ்சல்தலைகள் ஒட்டப்பட்ட 17 அஞ்சல் அட்டைகள் அடங்கிய கிஃப்ட் பேக் ரூ.625-க்கும், சாதாரண தபால்தலைகள் ஒட்டப்பட்ட 17 அஞ்சல் அட்டைகள் அடங்கிய கிஃப்ட் பேக் ரூ.330-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த அஞ்சல்தலைகளின் மேல்புறத்தில், கலாம் நினைவிட வடிவமைப்பை அஞ்சலக முத்திரையாகவும் பயன்படுத்தி யுள்ளனர். இவை தவிர, மாணவர்கள் தங்களின் நோட்டுப் புத்தகங்களில் ஒட்டக்கூடிய வகையில் அப்துல் கலாமின் படம் அச்சிடப்பட்ட லேபிள்களையும் வெளியிட்டுள்ளது. 16 லேபிள் கொண்ட அட்டையின் விலை, ரூ.24 என நிர்ணயித்துள்ளது. இந்திய அளவில் உள்ள முக்கிய அஞ்சலகங்கள் அனைத்திலும் அப்துல் கலாமின் புகழைச் சொல்லும் இந்தச் சிறப்பு அஞ்சல் அட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளன.