Published:Updated:

அ.தி.மு.க அம்மா அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்: டி.டி.வி தினகரன் அதிரடி!

அ.தி.மு.க அம்மா அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்: டி.டி.வி தினகரன் அதிரடி!
அ.தி.மு.க அம்மா அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்: டி.டி.வி தினகரன் அதிரடி!

அ.தி.மு.க அம்மா அணிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து, டி.டி.வி தினகரன் உத்தரவிட்டுள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் இணைய வேண்டும் என்று தினகரன் தெரிவித்தார். இதற்காக 60 நாள்கள் காலக்கெடு விதித்தார். அந்தக் காலக்கெடு இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு டி.டி.வி தினகரன் மேற்கொள்ளவிருக்கும் சுற்றுப்பயணப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


இந்நிலையில், அ.தி.மு.க அம்மா அணிக்குப் புதிய நிர்வாகிகள் பட்டியலை டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ளார். அதன்படி, அ.தி.மு.க அம்மா அணியின் அமைப்புச் செயலாளர்களாக, முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன், செந்தில் பாலாஜி, எஸ்.டி.கே. ஜக்கையன், தோப்பு வெங்கடாசலம், டி.கே.எம் சின்னையா, கு.ப. கிருஷ்ணன், மேலூர் ஆர். சாமி, சேலஞ்சர் துரை, சண்முகவேலு, மாதவரம் மூர்த்தி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


அதேபோல, கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர்களாக நாஞ்சில் சம்பத் மற்றும் இளவரசன் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, பல்வேறு பொறுப்புகளுக்குப் புதிய நிர்வாகிகளை நியமித்து, தினகரன் உத்தரவிட்டுள்ளார்.