Published:Updated:

பா.ஜ.க நடத்திய மாதிரி வாக்கெடுப்பு..! செல்லாத வாக்களித்த 16 எம்.பி-க்கள்

பா.ஜ.க நடத்திய மாதிரி வாக்கெடுப்பு..! செல்லாத வாக்களித்த 16 எம்.பி-க்கள்
பா.ஜ.க நடத்திய மாதிரி வாக்கெடுப்பு..! செல்லாத வாக்களித்த 16 எம்.பி-க்கள்

துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு முன்னோட்டமாக, பா.ஜ.க சார்பில் நடத்தப்பட்ட மாதிரி வாக்கெப்பில், அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 16 பேர், செல்லாத வாக்கு அளித்துள்ளனர். 

பா.ஜ.க நடத்திய மாதிரி வாக்கெடுப்பு..! செல்லாத வாக்களித்த 16 எம்.பி-க்கள்


குடியரசுத் தலைவர் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. அதில், பா..ஜ.க சார்பில் வெங்கைய நாயுடு போட்டியிடுகிறார். முன்னதாக குடியரசுத் தலைவர் தேர்தலின்போது 21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்லாத வாக்குகளைப் பதிவுசெய்திருந்தனர். ஓட்டு போடத் தெரியாததன் விளைவாக, 21 ஓட்டுகள் தவறாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதில் பெரும்பாலானவர்கள் பா.ஜ.க உறுப்பினர்கள்.

இந்த நிலையில், இன்று பா.ஜ.க சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, அவர்களுக்கு துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான மாதிரி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், 16 பேர் செல்லாத வாக்கு அளித்திருந்தனர். இதையடுத்து, அவர்களுக்கு வாக்களிப்பதுகுறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும், இன்று நடைபெறவுள்ள தேர்தலின் போது சரியாக வாக்களிக்க வேண்டும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியில், அ.தி.மு.க, டி.ஆர்.எஸ், ஒய்.எஸ்.ஆர் ஆகிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.