Published:Updated:

திருமுருகன் காந்தியை புழல் சிறையில் சந்திக்கிறார் வைகோ..!

எம்.கணேஷ்
திருமுருகன் காந்தியை புழல் சிறையில் சந்திக்கிறார் வைகோ..!
திருமுருகன் காந்தியை புழல் சிறையில் சந்திக்கிறார் வைகோ..!

சென்னை மெரினா கடற்கரையில் தடையை மீறி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தியதற்காக, மே17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் கைதுசெய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

திருமுருகன் காந்தியை புழல் சிறையில் சந்திக்கிறார் வைகோ..!

இந்நிலையில், சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் உத்தரவின் பேரில், அந்த நான்கு பேரின்மீது கடந்த மே 28-ம் தேதி குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்தக் கைதை எதிர்த்து திருமுருகன் காந்தி உட்பட நால்வரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதை விசாரித்த நீதிபதிகள், வரும் 30-ம் தேதிக்குள் தமிழக அரசு விளக்கம் தர உத்தரவிட்டனர்.

இந்நிலையில், நாளை ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, சிறையில் உள்ள திருமுருகன் காந்தியை சந்திக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. நாளை காலை 9 மணிக்கு இந்தச் சந்திப்பு நடக்கும் எனவும், தமிழகத்தின் உரிமைக்காக தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்துபவர்கள், குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டுவதுகுறித்து இருவரும் பேச இருக்கிறார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.