Published:Updated:

'விரைவில் பார்க்கலாம்'- முதல்வர் பழனிசாமி அதிரடித் தகவல்

சகாயராஜ் மு
'விரைவில் பார்க்கலாம்'- முதல்வர் பழனிசாமி அதிரடித் தகவல்
'விரைவில் பார்க்கலாம்'- முதல்வர் பழனிசாமி அதிரடித் தகவல்

"ஒன்றுபட்ட அ.தி.மு.க-வை விரைவில் பார்க்கலாம்" என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

தி.மு.க-வைச் சேர்ந்த 250 பேர் இன்று கட்சியிலிருந்து விலகி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க-வில் இணைந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, "நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசிடம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவருகிறோம். இந்த விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி விலக்குப் பெற சுகாதாரத்துறை அமைச்சர் டெல்லி சென்றுள்ளார்.

போதிய மழை இல்லாததால், தமிழகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவிவருகிறது. தமிழகத்தில் குடிநீர் வழங்க, போர்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தடுப்பணைகள் கட்ட 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்றத்தில், எதிர்க்கட்சியின் கேள்விகளுக்குத் தகுந்த பதில் அளித்துள்ளோம். சட்டமன்றம் வராதவர்களுக்கு இது தெரியாது" என்றார்.

செய்தியாளர்கள், ஓ.பன்னீர்செல்வம் அணியினர் எப்போது இணைவார்கள் என்று கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த முதல்வர் பழனிசாமி, ''ஒன்றுபட்ட அ.தி.மு.க-வை விரைவில் பார்க்கலாம்'' என்று அதிரடியாகக் கூறினார்.