Published:Updated:

டெசோ மாநாட்டுக்கு காவல்துறையும் அனுமதி மறுப்பு!

டெசோ மாநாட்டுக்கு காவல்துறையும் அனுமதி மறுப்பு!
டெசோ மாநாட்டுக்கு காவல்துறையும் அனுமதி மறுப்பு!
டெசோ மாநாட்டுக்கு காவல்துறையும் அனுமதி மறுப்பு!

சென்னை: சென்னையில் திமுக நடத்தவிருந்த டெசோ மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக்குப் பின்னர், இதற்கான உத்தரவை நேற்று நள்ளிரவு திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனிடம் போலீசார் அளித்தனர்.

டெசோ மாநாட்டுக்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, சென்னை உயர்  நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்,டெசோ மாநாட்டை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ள சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 8,000 பேர் மட்டுமே  அமர இடவசதி உள்ளது.

இந்நிலையில் இந்த மாநாட்டிற்கு எத்தனை பேர் வருவார்கள்; எத்தனை வாகனங்கள்  வெளியூர்களிலிருந்து வரும் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

எனவே இம்மாநாட்டை சென்னையில் நடத்த அனுமதிக்க முடியாது.அதே சமயம்   சென்னையை தவிர்த்து வேறு ஊர்களில் நடத்திக்கொள்ள ஆட்சேபணை இல்லை என்று  கூறினார்.

தொடர்ந்து இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம்,டெசோ மாநாட்டிற்கு அனுமதி அளிப்பது குறித்து தமிழக காவல்துறை பரிசீலிக்க வேண்டும் என்றும், இது தொடர்பான முடிவை காவல்துறை எடுக்கலாம் என்றும் உத்தரவிட்டது.

இதனையடுத்து டெசோ மாநாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்து வெள்ளிக்கிழமை ( நேற்று ) இரவுக்குள் முடிவெடுப்போம் என தமிழக அரசின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

அதன்படி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நள்ளிரவு 2 மணி வரை நடைபெற்ற கூட்டத்தில் டெசோ மாநாட்டுக்கு தடை விதிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

மாநாடு நடைபெற உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் எட்டாயிரம்பேர் மட்டுமே அமரக்கூடிய நிலையில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடும் என்றும், சென்னை மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் மாநாட்டிற்காக போக்குவரத்து மாற்றங்கள் செய்வது கடினம் போன்ற காரணங்களால் அனுமதி அளிப்பதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது.

##~~##
இதற்கான உத்தரவை இதற்கான உத்தரவை நேற்று நள்ளிரவு திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனிடம் போலீசார் அளித்தனர்.இந்த விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாட்டைப்  பொறுத்து தங்களது நடவடிக்கை இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

திட்டமிட்டபடி மாநாடு நடைபெறும்: கருணாநிதி

இதனிடையே டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

டெசோ மாநாட்டுக்கு காவல்துறையும் அனுமதி மறுப்பு!

இது தொடர்பாக நேற்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  " டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும். அமைதியான முறையில் மாநாடு நடக்க உதவிபுரிய காவல் துறைக்கும் பொறுப்பு இருக்கிறது. அந்தப் பொறுப்பை அவர்கள் தட்டிக் கழிக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன். யாருடைய உத்தரவுக்காகவோ, கட்டளைக்காகவோ தேவையில்லாமல் ஓர் அவப் பெயரை அவர்கள் தேடிக் கொள்ளமாட்டார்கள் என்று நம்புகிறேன்"என்றார் கருணாநிதி.

காவல் துறை அனுமதி மறுத்துவிட்டால் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, தடைக் கற்கள் உண்டெனினும், தடந்தோள்கள் உண்டு என்று பாரதிதாசன் பாடியிருக்கிறார் என்று பதிலளித்தார்.

இந்நிலையில் தடையை மீறி நடத்த முயன்றாலும்,மாநாட்டிற்கு வருபவர்களை கைது செய்யும் பட்சத்தில் நிலைமை சிக்கலாகும். எனவே திட்டமிட்டபடி நாளை டெசோ மாநாடு நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.