Published:Updated:

'மத்திய அரசுக்கு ஜால்ரா அடிக்கும் மாநில அரசு'" கதிராமங்கலத்தில் திருமாவளவன் காட்டம்!

ஏ.ராம்
'மத்திய அரசுக்கு ஜால்ரா அடிக்கும் மாநில அரசு'" கதிராமங்கலத்தில் திருமாவளவன் காட்டம்!
'மத்திய அரசுக்கு ஜால்ரா அடிக்கும் மாநில அரசு'" கதிராமங்கலத்தில் திருமாவளவன் காட்டம்!

மத்திய அரசுக்கு, மாநில அரசு ஜால்ரா போடுகிறது என்று கதிராமங்கலத்தில் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.


ஓஎன்ஜிசி நிறுவனத்தை கதிராமங்கலத்தைவிட்டு வெளியேற்ற வேண்டும், டெல்டா மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க வேண்டுமென கதிராமங்கலம் மக்கள் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு நூதனப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கதிராமங்கலம் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து கதிராமங்கலம் வந்த திருமாவளவன், "மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. வேளாண் மண்டலமாக அறிவிக்கக் கோரி நாம் தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால், மத்திய அரசு பெட்ரோலிய மண்டலமாக அறிவித்திருக்கிறது என்றால், மத்திய அரசு விவசாயத்தையும், விவசாயிகளையும் ஒட்டுமொத்தமாக அழிக்க நினைக்கிறது. இதையெல்லாம் கண்டுகொள்ளாத தமிழக அரசு எதிர்ப்பை தெரிவிப்பதுபோன்று தெரிவித்து, மத்திய அரசின் திட்டங்களுக்கு ஜால்ராவும் போட்டு வருகிறது. பெட்ரோலிய மண்டலமாக அறிவித்ததைத் எதிர்த்து போராடும் மக்களுக்கு நான் என்றும் துணை நிற்பேன். விவசாயத்துக்கு ஆதரவான என்னுடைய போராட்டம் தொடர்ந்து வெடிக்கும்" என்று பேசினார்.