Published:Updated:

துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் அன்சாரி!

துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் அன்சாரி!
துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் அன்சாரி!
துணை ஜனாதிபதியாக பதவியேற்றார் அன்சாரி!

புதுடெல்லி: இந்தியாவின் 14 ஆவது துணை ஜனாதிபதியாக மீண்டும்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஹமீத் அன்சாரி  ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெற்ற  விழாவில் பதவியேற்றார்.

துணை ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில்  ஹமீத் அன்சாரி,  தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பா.ஜ.க. மூத்த தலைவர்  ஜஸ்வந்த்சிங்  போட்டியிட்டனர்.

இத்தேர்தலில் ஹமீத் அன்சாரி 252 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.   ஹமீத் அன்சாரிக்கு 490 ஓட்டுக்களும் ஜஸ்வந்த்சிங்குக்கு 238 வாக்குகளும்   கிடைத்தன.

75 வயதாகும் ஹமீத் அன்சாரி, இந்த வெற்றி மூலம் மீண்டும் 2-வது தடவையாக   துணை ஜனாதிபதி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் அன்சாரியின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து,அவர் துணை  ஜனாதிபதியாக இன்று பதவி ஏற்றுக் கொண்டார்.ஜனாதிபதி மாளிகையில் இன்று  நடைபெற்ற விழாவில் அவர் முறைப்படி பதவியேற்றுக்கொண்டார்.

இவ்விழாவில் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.