Published:Updated:

காவிரி: 10 நாளில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!

காவிரி: 10 நாளில் மத்திய அரசு பதிலளிக்க  உத்தரவு!
காவிரி: 10 நாளில் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு!
காவிரி: 10 நாளில் மத்திய அரசு பதிலளிக்க  உத்தரவு!

புதுடெல்லி: காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்டுவது தொடர்பாக 10 நாளில் பதிலளிக்க  வேண்டும், என்று தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் மத்திய அரசிற்கு  உத்தரவிட்டுள்ளது.

காவிரி நதிநீர் ஆணையத்தை கூட்ட உத்தரவிடக்கோரி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில்  ஒரு மனு தாக்கல் செய்திருந்தது.

இம்மனுவை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம்,வழக்கு விசாரணைக்கு மத்திய அரசின்  மூத்த வழக்கறிஞர்கள் ஆஜரால்காமல் இருப்பதை குறிப்பிட்டு,காவிரி நதிநீர் வழக்கில்,  மத்திய அரசு மெத்தனமாக செயல்படுவதாக கூறி , கடும் அதிருப்தி  வெளியிட்டது.

##~~##
மேலும் இது தொடர்பாக மத்திய அரசும், கர்நாடக அரசும் இன்னும் 10 தினங்களுக்குள்  தங்களது பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிமன்றம்,
மனு மீதான அடுத்த கட்ட விசாரணையை,வருகிற செப்டம்பர் 3 ம் தேதிக்கு   ஒத்திவைத்து உத்தரவிட்டது.