Published:Updated:

கேள்வி கேட்ட விவசாயி கைது: மம்தாவுக்கு தலைவர்கள் கண்டனம்!

கேள்வி கேட்ட விவசாயி கைது: மம்தாவுக்கு தலைவர்கள் கண்டனம்!
கேள்வி கேட்ட விவசாயி கைது: மம்தாவுக்கு தலைவர்கள் கண்டனம்!
கேள்வி கேட்ட விவசாயி கைது: மம்தாவுக்கு தலைவர்கள் கண்டனம்!

கொல்கத்தா/புதுடெல்லி: மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தாவிடம் கேள்வி கேட்ட  விவ்சாயியை கைது செய்ததற்கு பா.ஜனதா உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கண்டனம்  தெரிவித்துள்ளன.
 
மம்தா பானர்ஜி,மேற்குவங்க மாநிலத்தில் கடந்த 8-ம்  தேதி நடந்த பொதுக்கூட்டத்தில்  பேசினார். அப்போது கூட்டத்தில் பங்கேற்ற சிலாதித்யா சவுத்ரி என்பவர் மம்தாவை  நோக்கி, "வெறும் வெற்று வாக்குறுதிகளை அளிப்பதைத் தவிர விவசாயிகளுடைய  நலனுக்காக உங்கள் அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?” என்று கேள்வி  எழுப்பினார்.
 

##~~##
இதில் ஆத்திரம் அடைந்த மம்தா பானர்ஜி, அவரைக் கைது செய்யுமாறு உத்தரவிட்டார்.  இந்நிலையில் இந்த விவகாரம் சர்ச்சையையும், பல்வேறு தரப்பினரின் கண்டனத்தையும்  ஏற்படுத்தி உள்ளது.
 
இது குறித்து கருத்து தெரிவித்த பா.ஜனதா செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன்  கூறுகையில், ”கேள்விகள் எழுப்புகிறபோது, அரசியல் கட்சிகள் ஓடிவிட முடியாது.  கேள்வி கேட்கிறபோது பதில் அளிக்க வேண்டியது நமது கடமை.கேள்விகள்  கேட்கிறவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது சரியானதல்ல”என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் நிலோத்பால் பாசு, "கேள்வி கேட்டவரை மம்தா  கைது செய்ய உத்தரவிட்டது சர்வாதிகாரம்” என்றார்.