Published:Updated:

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: ஆச்சார்யா ராஜினாமா!

ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: ஆச்சார்யா ராஜினாமா!
ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: ஆச்சார்யா ராஜினாமா!
ஜெ. சொத்துக் குவிப்பு வழக்கு: ஆச்சார்யா ராஜினாமா!

பெங்களூரு: தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும்  பெங்களூரு  தனி நீதிமன்றத்தில்,  அரசு தரப்பு வழக்கறிஞராக வாதாடிய ஆச்சார்யா,திடீரென அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.

ராஜினாமா கடிதத்தை கர்நாடக உள்துறை செயலருக்கு அனுப்பியுள்ள ஆச்சார்யா, மன உளைச்சல் காரணமாக தம்மால் பணியில் தொடர முடியவில்லை என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

வழக்கு விசாரணை முடிவடையும் தருவாயில்,தொடர்ந்து பலமுறை சசிகலா,சுதாகரன்  மற்றும் இளவரசி உள்ளிட்டோர் முதுகுவலி, கண்வலி என்று வழக்கறிஞர்கள் மூலம் மனு  தாக்கல் செய்து,நீதிமன்றத்தில் ஆஜராகமால் விலக்கு கோரி வந்தனர்.இது ஆச்சார்யாவை மிகவும் மன வேதனைக்குள்ளாக்கியது.

வழக்கை இழுத்தடிக்க வேண்டுமென்றே ஒவ்வொரு முறையும் ஏதாவது காரணங்கலை கூறுவதாக நீதிபதியிடம் அவர் குமுறினார்.இவையெல்லாவற்றிற்கு கிளைமாக்சாக, இவ்வழக்கை விசாரித்த நீதிபதி மல்லிகார்ஜூனையாவின் நியமனமே செல்லாது என்று ஜெயலலிதா உள்ளிட்டோ கடைசி நேரத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்தனர்.ஆனால் அவ்வழக்கை மல்லிகார்ஜூனையாவே விசாரித்து தள்ளுபடி செய்டஹ்போதிலும்,ஜெயலலிதா தரப்பு மேல்முறையீட்டுக்கு சென்றது.

இதனிடையே நீதிபதியின்  மல்லிகார்ஜூனையாவின் பதவிக்காலமும் முடிவடையும் நிலையில்,புதிய நீதிபதியை  நியமிப்பதற்கான நடவடிக்கைகள் இனிமேல்தான் தொடங்கப்பட உள்ளன.

இந்நிலையில் அரசு தரப்பு வழக்கறிஞராக ஆஜராகி வாதாடிய ஆச்சார்யாவும் பதவி  விலகிவிட்டதால், புதிதாக நியமிக்கப்படும் அரசு வழக்கறிஞர் ஜெயலலிதா  உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் தன்மைளையும்,சட்ட  நுணுக்கங்களையும் ஆராய்ந்து தயாராகி,அதன் பின்னர் விசாரித்து முடித்து,நீதிபதி தீர்ப்பளிப்பதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகப்போகிறதோ என்று மலைக்கின்றனர் இவ்வழக்கை ஆரம்பத்திலிருந்து உற்று நோக்கும் வழக்கறிஞர்கள்.