Published:Updated:

”சந்தா கேட்டார் பிறகு மன்னிப்பு கேட்டார்..!” - ம.தி.மு.க கூட்டத்தில் வைகோ

”சந்தா கேட்டார் பிறகு மன்னிப்பு கேட்டார்..!” - ம.தி.மு.க கூட்டத்தில் வைகோ
News
”சந்தா கேட்டார் பிறகு மன்னிப்பு கேட்டார்..!” - ம.தி.மு.க கூட்டத்தில் வைகோ

”சந்தா கேட்டார் பிறகு மன்னிப்பு கேட்டார்..!” - ம.தி.மு.க கூட்டத்தில் வைகோ

ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, ஓபன் மைக்கில் தொண்டர்களிடம் மன்னிப்புக் கேட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.

திருச்சியில் ம.தி.மு.க மகளிர் அணி, மாவட்டச் செயலாளர் ஆலோனைக் கூட்டம், வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டம் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளை நேற்றும் இன்றும் நடத்திவருகிறார் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ. நேற்று காலை நடந்த ம.தி.மு.க மகளிர் அணி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதோடு மாலை 4 மணியிலிருந்து ம.தி.மு.க மாவட்டச் செயலாளர் ஆலோனைக் கூட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டப் பொறுப்பாளர்களான சேரன், வெல்லமண்டி சோமு, உயர்மட்டக்குழு நிர்வாகி வழக்கறிஞர் வீரபாண்டியன், அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, துணைப் பொதுச்செயலாளர் துரை பாலகிருஷ்ணன், அக்கட்சியின் மாநில மகளிர் அணிச் செயலாளர் டாக்டர் ரொகையா எனப் பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வைகோ, மாலை 5 மணியிலிருந்து இரவு 11மணிவரை, அவர்களின் கட்சிப் பத்திரிகையான 'சங்கொலி'க்குச் சந்தா கேட்டு, கடுமையாக நடந்துகொண்டார். கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவரின் பெயரைச் சொல்லி, ''உங்கள் சந்தா என்னாச்சு'' என அதட்டிக் கேட்டார். இதனால் கூட்டத்தில் இருந்த பாதிப்பேர் பாதியிலேயே எஸ்கேப் ஆனார்கள்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

நிகழ்ச்சியில் பேசிய ம.தி.மு.க உயர்நிலைக் குழு நிர்வாகி வழக்கறிஞர் வீரபாண்டியன், “தலைவர் இந்தக் கூட்டத்தை நடத்த முதலில் சம்மதிக்கவில்லை. ஆனால், தஞ்சையில் நடக்க உள்ள மாநாட்டுக்காகத் தொண்டர்களிடம் கலந்தாலோசிக்க வேண்டும் என வலியுறுத்தியதன் அடிப்படையில் அவர் கலந்துகொண்டார். கூட்டத்துக்கு வந்த நிர்வாகிகளிடம், நாங்கள் 'சங்கொலி' சந்தா குறித்து பேசவில்லை. ஏனெனில், இப்போதைக்குத் தஞ்சையில் நடக்கும் மாநாட்டுக்கு திருச்சியில் இருந்துதான், தமிழகத்திலேயே அதிக நபர்களைத் திரட்டிக்கொண்டு வருவதற்கான முயற்சியில் இருக்கிறோம். மாநாடு முடிந்ததும் 'சங்கொலி' சந்தாமீது கவனம் செலுத்துவோம். தலைவர் கவலைப்படவேண்டாம்” என்று முடித்தார்.

இறுதியாக மைக் பிடித்த வைகோ, “இந்த இயக்கம் தொண்டர்களால் உருவான இயக்கம். பல நிர்வாகிகள், இவ்வளவு வருடங்களாகக் கட்சியில் இருக்கிறார்கள். தலைவர் கண்டுகொள்ளவில்லை என வருத்தப்பட்டதாக அறிகிறேன். அப்படி வருத்தப்படவேண்டிய அவசியமில்லை. உண்மையாக இருப்பவர்களுக்குத்தான் இங்கு மரியாதை. கரன்சி, கார் வைத்திருப்பவர்கள்  இங்கு ஒருபோதும் காரியம் சாதிக்க முடியாது. நிச்சயம் நாம் அதிகாரத்தைக் பிடிப்போம். அப்போது உண்மையான தொண்டர்களுக்குத்தான் அங்கீகாரம் கிடைக்கும், பொறுப்புக்கு வரமுடியும். தலைவர் வரும்போது பாவலா செய்து பெயர் எடுத்துவிடலாம் என யாரும் நினைத்துவிடக் கூடாது. மக்கள் பணியைச் செய்யுங்கள். கட்சியை வளர்க்க மக்களைச் சந்தியுங்கள். காலையில் நடந்த நம் கட்சியின் மகளிர் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியதில் இருந்து, கூட்டம் முடியும்வரை ஒருவர்கூட எழுந்துச் செல்லவில்லை. ஆனால், தலைவருக்காக உயிரைக் கொடுப்பேன் என வசனம் பேசும் உங்கள் கூட்டத்தில், பாதி நாற்காலிகள் காலியாகவே கிடக்கிறது. நம் கட்சி பெண்களிடம் கட்சியின் கட்டுப்பாட்டைக் கற்றுக்கொள்ளுங்கள். இந்தப் பொதுக்கூட்டத்துக்காகவும், தஞ்சையில் நடக்க உள்ள மாநாட்டுக்காகவும் செய்யப்படும் முன்னேற்பாடுகளை நெடுஞ்சாலைத் துறையும், காவல் துறையும் தடுத்துவருகிறது'' என்றவர்,

 '' 'உங்கள்மீது நல்ல மதிப்பு உண்டு. அதைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள்'  ''என திருச்சி மாநகர காவல் ஆணையாளரையும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளையும் எச்சரித்த அவர் தொடர்ந்து,  ''வீரபாண்டியன் பேசும்போது 'சங்கொலி' சந்தா வசூல் குறித்துப் பேசினார். அதை நான் யோசிக்காமல் விட்டுவிட்டேன். இப்போதைக்கு நமக்குத் தஞ்சை மாநாடுதான் முக்கியம். 1956-ல் திராவிட இயக்கங்கள் தேர்தல் அரசியலுக்காகப் போடப்பட்ட மாநாட்டைப்போல, வரும் செப்டம்பர் 15-ம் தேதி நடத்தும் அண்ணா பிறந்தநாள் மாநாடு திராவிட இயக்கங்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மாநாடாக அமையும். இப்படிப்பட்ட பிரமாண்டமான மாநாட்டுக்குத் தொண்டர்கள் தயாராகிக்கொண்டிருக்கும் நிலையில், உங்களிடம் 'சங்கொலி'க்குச் சந்தா கேட்டுச் சங்கடப்படுத்தியதற்கு என்னை மன்னித்துவிடுங்கள். உண்மையில், இது எனக்குத் தோன்றவில்லை என்பது வருத்தமாக உள்ளது. ஆனாலும், நான் பிறந்த நெல்லை மாவட்டத்தைவிடவும், திருச்சியில்தான் அதிக சந்தா வசூல் ஆகி உள்ளது” என்று முடித்தார்.