Published:Updated:

71-வது சுதந்திர தினம்: தீவிர பாதுகாப்பு வளையத்துக்குள் வந்த தலைநகர்!

71-வது சுதந்திர தினம்: தீவிர பாதுகாப்பு வளையத்துக்குள் வந்த தலைநகர்!
71-வது சுதந்திர தினம்: தீவிர பாதுகாப்பு வளையத்துக்குள் வந்த தலைநகர்!

71-வது சுதந்திர தினம்: தீவிர பாதுகாப்பு வளையத்துக்குள் வந்த தலைநகர்!

இந்தியா தனது 71-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது. நாளை டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். இதற்காக தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இன்னும் ஒரு நாளே இருப்பதால் தலைநகர் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளின் ஊடுருவலைத் தடுப்பதற்காக எல்லையிலும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

பேருந்து, ரயில் நிலையங்கள், விமான நிலையம், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சிறப்புப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. டெல்லி முழுவதும் பல அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுள்ளது. செங்கோட்டையைச் சுற்றி தீவிரமாகக் கண்காணிக்க 100-க்கும் அதிகமான சி.சி.டி.வி கேமராக்கள் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், சிறப்பு வாகனங்கள், அதிநவீன கருவிகள் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. துணை ராணுவப்படையினரும் டெல்லியில் குவிக்கப்பட்டுள்ளனர். ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் அந்த இக்கட்டான சூழலைக் கையாள்வதற்கு தேர்ந்த அதிரடிப் படையினரும் களத்தில் இறங்கியுள்ளனர். சந்தேகப்படும்படியான நபர்களோ, பொருள்களோ தென்பட்டால் உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அடுத்த கட்டுரைக்கு