Published:Updated:

எந்தத் துறைக்கு யார்தான் அமைச்சர்? ப.சிதம்பரம் கேள்வி

எந்தத் துறைக்கு யார்தான் அமைச்சர்? ப.சிதம்பரம் கேள்வி
எந்தத் துறைக்கு யார்தான் அமைச்சர்? ப.சிதம்பரம் கேள்வி

எந்தத் துறைக்கு யார்தான் அமைச்சர்? ப.சிதம்பரம் கேள்வி

மத்திய அமைச்சரவையில் எந்தத் துறைக்கு, யார் பொறுப்பு என்றே தெரியவில்லை என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். 
 


இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்துத் தெரிவித்துள்ள அவர், ’நீட் விவகாரத்தில் வர்த்தகத் துறை அமைச்சர் உறுதியளிக்கிறார்; ஜிஎஸ்டி வரி விகித மாற்றத்துக்கு மத்திய மின்சாரத்துறை அமைச்சர் மறுப்புத் தெரிவிக்கிறார். எந்தத் துறைக்கு யார் பொறுப்பு?’ என்று அவர் விமர்சித்துள்ளார். நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு முழுமையாக விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார். மேலும், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு ஓராண்டு மட்டும் விலக்கு அளிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

கோரக்பூர் விவகாரம் குறித்தும் அவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், கோரக்பூர் கோர சம்பவத்துக்குப் பொறுப்பேற்க உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேர்மையான ஒருவர் கூட கிடையாதா? என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்சிஜன் வழங்குவது நிறுத்தப்பட்டதால் கடந்த ஒரு வாரத்தில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. 

அடுத்த கட்டுரைக்கு