Published:Updated:

இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை: மத்திய அரசுக்கு ஜெ. வலியுறுத்தல்

இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை: மத்திய அரசுக்கு ஜெ. வலியுறுத்தல்
இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை: மத்திய அரசுக்கு ஜெ. வலியுறுத்தல்

சென்னை: இலங்கை முகாம்களில் வாழும் தமிழர்கள் அனைவரும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பிச் செல்வதற்கும், சிங்களர்களுக்கு இணையான உரிமைகளைப் பெறுவதற்கும் அந்த நாட்டு அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

நாட்டின் 66-வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னையில் தலைமைச் செயலகத்தில் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்துப் பேசுகையில் இதனைக் கூறிய அவர்,மேலும் பேசியதாவது:

இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை: மத்திய அரசுக்கு ஜெ. வலியுறுத்தல்

சுதந்திரத் திருநாளை கொண்டாடிக் கொண்டிருக்கும் இந்த வேளையில், நம் உறவுகளாகிய இலங்கை முகாம்களில் வாழும் தமிழர்கள் அனைவரும் தங்கள் சொந்த இருப்பிடங்களுக்கு திரும்பிச் செல்வதற்கும், சிங்களர்களுக்கு இணையான உரிமைகளைப் பெறுவதற்கும் வழிவகை ஏற்படுத்த இனிமேலாவது இலங்கை அரசை வலியுறுத்தி அவர்களின் துயரை நீக்க வேண்டும் என மத்திய அரசை இந்த தருணத்தில் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

சுதந்திரம் என்பது ஒவ்வொருவருக்கும் வேண்டும்.ஆனால், அந்தச் சுதந்திரம் வரம்பு மீறாமல் இருக்க வேண்டும்.எல்லா விதத்திலும் கண்ணியம் மற்றும் கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும்.அதுதான் உண்மையான சுதந்திரம். இந்த உண்மையான சுதந்திரம் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.

எனக்குச் சுதந்திரம் இருக்கிறது என்று அடுத்தவரின் சுதந்திரத்தை,உரிமையை, வாழ்வாதாரத்தைப் பறிக்கும் விதத்திலோ,மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்திலோ யாரேனும் செயல்பட்டால்,அவர்கள் யாராக இருந்தாலும் சரி,அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா எச்சரித்தார்.
 
தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக ஆக்குவது மட்டுமல்லாமல், விரைந்த வளர்ச்சி எய்தும் நடுத்தர வருவாய் நாடுகளுக்கு இணையாக தமிழகத்தின் வளர்ச்சி இருக்க வேண்டும் என்பதே எனது லட்சியம். இந்த லட்சியத்தை எய்தும் வகையிலும், நாட்டின் மொத்த வளர்ச்சி ஆண்டுக்கு 11 சதவீதம் அல்லது அதற்கு மேலாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் எதிர்பார்க்கப்படுகின்ற மொத்த வளர்ச்சியைக் காட்டிலும் 20 சதவீதம் கூடுதல் வளர்ச்சி பெற வேண்டும் என்ற நிலையிலும் தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

##~~##
வேளாண்மைத் துறையில் உணவு தானிய உற்பத்தியின் அளவு கடந்த நிதியாண்டில் சாதனை அளவாக 106 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. காவிரியில் நமக்குரிய பங்கினை உரிய நேரத்தில் கர்நாடகம் விடுவிக்கவில்லை. இதனால், குறுவை சாகுபடி பரப்பு இந்த ஆண்டு குறைந்துள்ளது.
ஆனாலும், டெல்டா விவசாயிகளுக்கு 12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்கிய காரணத்தால் 1.37 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பா பயிர் சாகுபடி வழக்கமான பரப்பில் மேற்கொள்ளும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
##~~##
கடந்த 15 மாதங்களில் மட்டும் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் காலிப் பணியிடங்களை நிரப்ப உத்தரவிடப்பட்டது. அவற்றில் பெரும்பாலான பணியிடங்கள் நிரப்பப்பட்டு விட்டன. மீதமுள்ள இடங்கள் ஒரு சில மாதங்களில் நிரப்பப்படும்.
வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழும் ஏழைகள் பயன்பெறும் வகையில் விலையில்லாத திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த நிதியாண்டில் 25 லட்சம் மின்விசிறிகள், மிக்ஸி மற்றும் கிரைண்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் 35 லட்சம் பயனாளிகளுக்கு இவை வழங்கப்படும். விலையில்லாத கறவைப் பசுக்கள் மற்றும் ஆடுகள் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 17 ஆயிரம் பயனாளிகளுக்கு பசுக்களும், 1.70 லட்சம் பயனாளிகளுக்கு 6.80 லட்சம் வெள்ளாடுகளும் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.