Published:Updated:

’யார் இந்த எடப்பாடி பழனிசாமி?’ - புதிருக்கு விடைகொடுக்கும் தினகரன்!

’யார் இந்த எடப்பாடி பழனிசாமி?’ - புதிருக்கு விடைகொடுக்கும் தினகரன்!
’யார் இந்த எடப்பாடி பழனிசாமி?’ - புதிருக்கு விடைகொடுக்கும் தினகரன்!

’யார் இந்த எடப்பாடி பழனிசாமி?’ - புதிருக்கு விடைகொடுக்கும் தினகரன்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி  டி.டி.வி. தினகரனை ’420’ என்று விமர்சனம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பரபரப்பு முடிவதற்குள்  ’முதல்வரை 420 எனக் கூற எனக்கு பயமில்லை’ என டி.டி.வி.தினகரன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

’யார் இந்த எடப்பாடி பழனிசாமி?’ - புதிருக்கு விடைகொடுக்கும் தினகரன்!


 

அ.தி.மு.க உட்கட்சி பூசல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது. ஒவ்வொரு அணியும் தனித்தனியாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், மதுரை மாவட்டம் மேலூரில் அ.தி.மு.க. அம்மா அணியின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது. கூட்டத்துக்கு முன்பாக மதுரையில் தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் எடப்பாடி பழனிசாமி அணியை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். 

அவர் பேசுகையில் ’எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரானது ஒரு விபத்து. எங்களால் முதலமைச்சர் ஆக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. அவரை 420 எனக் கூற எனக்கு பயமில்லை. பதவி இருக்கின்ற காரணத்தால் ஆடுகிறார்கள்.  ’அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் - அர்த்த ராத்திரியிலும் குடை பிடிப்பான்’ என்று சொல்லுவார்கள். அப்படித்தான் இருக்கிறது இவர்களின் செய்கைகள். ஜெயலலிதா இருந்தவரை இவர்கள் அனைவரும் அமைதியாக இருந்தார்கள். இப்போது இவர்களை அடக்க ஆளில்லை. தவறு செய்பவர்கள் அனைவரும் திருத்தப்படுவார்கள். முக்கணாங் கயிறு போட்டு அவர்களை அடக்குவோம். 

என் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானது. சுயநலத்துக்காக, மற்றவர்களைக் காரணம் காட்டி கட்சியினரை ஏமாற்றுகின்றனர். எடப்பாடி பழனிசாமி யார் என்பதை இன்று மாலை கூறுவேன். அனைத்துக் கேள்விகளுக்கும் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பதில் கிடைக்கும்’ என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்டுரைக்கு