Published:Updated:

பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு
பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

பிரதமர் மோடியுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

பிரதமர் மோடியை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னிர்செல்வம் சந்தித்துப் பேசினார். 


இந்த சந்திப்பின்போது அ.தி.மு.க. எம்.பி மைத்ரேயனும் உடனிருந்தார். அணிகள் இணைப்பு, தமிழக பிரச்னைகள் குறித்து இந்த சந்திப்பின்போது விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. டி.டி.வி. தினகரன் நியமனம் செல்லாது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்துள்ள நிலையில், இந்த சந்திப்பு நடைபெற்றது.

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவருமே டெல்லி சென்றிருந்தனர். அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமே பிரதமர் மோடியை சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டது. இதையடுத்து மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடி சென்று வழிபட்ட ஓ.பன்னீர்செல்வம், மீண்டும் டெல்லி சென்றார். 

இந்தநிலையில், பிரதமர் மோடியை சந்திக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்று நேரம் ஒதுக்கப்பட்டது. அணிகள் இணைப்பு தொடர்பாக பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானதே என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை வேகமெடுத்துள்ள நிலையில், இதுதொடர்பான அறிவிப்பு விரைவில் வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

அடுத்த கட்டுரைக்கு