Published:Updated:

சாதனை படைத்த புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை! வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர்

சாதனை படைத்த புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை! வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர்
சாதனை படைத்த புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை! வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர்

சாதனை படைத்த புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை! வாழ்த்து தெரிவித்த மத்திய அமைச்சர்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் கைகளை அறுவைசிகிச்சை மூலம் இளைஞருக்குப் பொருத்தப்பட்ட செய்தியை “இளைஞருக்கு பெண்ணின் கைகள்” என்ற தலைப்பில் விகடன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா ஜிப்மர் மருத்துவமனைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியைச் சேர்ந்தவர் ரத்தினாம்பாள். 50 வயதான இவர், கடந்த 1-ம் தேதி இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்தார். இவர் மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் 2-ம் தேதி மூளைச்சாவு அடைந்தார். அதையடுத்து ரத்தினாம்பாளின் சிறுநீரகங்கள், கண்கள் உள்ளிட்ட உடல் உறுப்புகள் உறவினர்களின் ஒப்புதலுடன் தானமாகப் பெறப்பட்டு உரிய நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டது. அதேபோல், அவரது இரண்டு கைகளும் மின்சாரத்தில் கைகளை இழந்த 16 வயது இளைஞருக்குப் பொருத்தப்பட்டது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தனது டிவிட்டர் பக்கத்தில், “இந்தியாவில் முதல் முறையாக மூளைச்சாவு அடைந்தவரின் கைகளை வேறொருவருக்குப் பொருத்தி சாதனை படைத்திருக்கின்றது ஜிப்மர் மருத்துவமனை. அரசு மருத்துவமனை புரிந்திருக்கும் மிகப்பெரிய சாதனை இது. இந்த சாதனையை வெற்றிகரமாக நிகழ்த்திய ஜிப்மர் நிர்வாகத்துக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு