Published:Updated:

'நமது எம்.ஜி.ஆர்' ஆசிரியர் நீக்கமா!?

'நமது எம்.ஜி.ஆர்' ஆசிரியர் நீக்கமா!?
'நமது எம்.ஜி.ஆர்' ஆசிரியர் நீக்கமா!?

'நமது எம்.ஜி.ஆர்' ஆசிரியர் நீக்கமா!?

அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ பத்திரிகையான 'நமது எம்.ஜி.ஆர்', தொடர்ச்சியாக மத்திய அரசை கட்டுரை மற்றும் கவிதை வடிவங்கள் மூலம் விமர்சனம் செய்துவந்தது. குறிப்பாக சில நாள்களுக்கு முன்னர், 'காவி அடி, கழகத்தை அழி' என்று தலைப்பிட்டு வந்த கவிதை மத்திய அரசை நேரடியாகக் கடுமையாகத் தாக்கியிருந்தது.

'நமது எம்.ஜி.ஆர்' ஆசிரியர் நீக்கமா!?

இந்நிலையில், இன்று டி.டி.வி.தினகரன் மதுரை, மேலூரில் கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக பதவியேற்றப் பிறகு முதன்முறையாக பொதுக் கூட்டத்தில் பேசினார். அந்தக் கூட்டத்தில், மத்திய அரசைப் பற்றி வாய் திறக்காத தினகரன், 'கட்சியிலிருந்து கறுப்பு ஆடுகள் நீக்கப்படும்' என்று சூசகமாக கூறினார். இதையடுத்து, நமது எம்.ஜி.ஆர் நாளிதழின் ஆசிரியர் மருது அழகுராஜ், அந்தப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. இது குறித்து மருது அழகராஜுக்கு நெருக்கமான வட்டாரங்களில் விசாரித்த போது, 'மருது அழகுராஜ் தற்போது ஒரு வாரம் விடுப்பில் சென்றுள்ளார். சசிகலாவால்தான் அவரை நீக்க முடியும். இதுவரை சசிகலாவிடமிருந்து எந்தத் தகவலும் இல்லை. இப்போது நிலவி வரும் சூழலை சரிகட்ட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் மருது அழகுராஜ் பணிக்கு திரும்புவார்' என்று தெரிவித்தனர். 

அடுத்த கட்டுரைக்கு