Published:Updated:

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் சுதந்திர தின உரையில் ஜிஎஸ்டி!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் சுதந்திர தின உரையில் ஜிஎஸ்டி!
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் சுதந்திர தின உரையில் ஜிஎஸ்டி!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தின் சுதந்திர தின உரையில் ஜிஎஸ்டி!

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு தனது சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் பதவியேற்று சந்திக்கும் முதல் சுதந்திர தினம் இது என்பதால், பல்வேறு நாட்டு நடப்புகள் குறித்து உரையாடி, தனது வாழ்த்தை மக்களிடத்தில் தெரிவித்துள்ளார்.

அவரது உரையில், “புதிய இந்தியாவை உருவாக்குவதற்காக நாம் இணைந்து செயல்படுவோம். வரும் 2022-ம் ஆண்டு இந்தியா தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கிறது. நம் நாட்டின் விடுதலைக்காகப் போராடி, உயிர் நீத்தவர்களுக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். இந்திய அரசின் கொள்கைகளும், பயன்களும் சமூகத்தில் அனைத்து மட்டத்தினருக்கு போய்ச் சேர வேண்டும். அதற்காக நாம் பணியாற்ற வேண்டியது அவசியம். கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையில் மக்கள் அளித்த ஆதரவு, ஜிஎஸ்டி-யை மக்கள் வரவேற்றது இவை எனக்கு மகிழ்ச்சி அளித்தது. ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை அரசு செயல்படுத்தும்போது மக்களும் நாட்டைத் தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அரசும் மக்களும் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். பெண் குழந்தைகளின் கல்விக்கு பாகுபாடு காட்டாமல் உதவ வேண்டும்” என்றார்

அடுத்த கட்டுரைக்கு