Published:Updated:

'கம்யூனிஸ்ட் கட்சி வழியைப் பின்பற்ற வேண்டும்!'- குமரியில் வைகோ பேச்சு

'கம்யூனிஸ்ட் கட்சி வழியைப் பின்பற்ற வேண்டும்!'- குமரியில் வைகோ பேச்சு
'கம்யூனிஸ்ட் கட்சி வழியைப் பின்பற்ற வேண்டும்!'- குமரியில் வைகோ பேச்சு

'கம்யூனிஸ்ட் கட்சி வழியைப் பின்பற்ற வேண்டும்!'- குமரியில் வைகோ பேச்சு

குமரி மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ம.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்துக்கு வந்த வைகோ செய்தியாளர்களிடம், "அதிகமான தமிழர்கள் கேரளாவில் கூலி வேலை செய்துவருகின்றனர். இருப்பினும், தமிழர்களுக்கு கேரளாவில் பாதுகாப்பு இல்லை. ஆனால், மலையாளிகளை தமிழர்கள் சகோதரர்களாகத்தான் பார்க்கிறார்கள். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் விபத்தில் காயம் பட்டு போராடிக்கொண்டிருக்கும்போது வென்டிலேட்டர் வசதி இல்லை என ஆறு மருத்துவமனைகளில் சிகிச்சை மறுக்கப்பட்டுள்ளது. அதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் வருத்தம் தெரிவித்தார். காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தார்கள். ஆனால், இன்னும் யாரும் கைதுசெய்யப்படவில்லை. எனவே, உடனடியாக சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்ய வேண்டும். 25 லட்சம் ரூபாயை முருகனின் குடும்பத்துக்குக் கொடுக்க வேண்டும். இதனை உடனடியாக கேரள அரசு செய்ய வேண்டும்' என தெரிவித்தார்.

அதன்பின் ம.தி.மு.க செயல்வீரர் கூட்டத்தில் பேசிய வைகோ. 'ம.தி.மு.க-வின் மூத்த முன்னோடி சம்பத் சந்திரா இறந்த காரணத்தால் மத்தியக் கூட்டுறவுத் தலைவர் பதவி காலியாக இருக்கிறது. அதில் அவருடைய  மனைவி தலைவராக பொறுப்பேற்க அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும். நடைபெற இருக்கும் ம.தி.மு.க மாநாட்டில் பல முக்கிய அறிவிப்புகளை அறிவிக்க இருக்கிறேன். திமு.க-வில் இருந்து நான் வெளியேறியபோது எனக்கு குமரி மாவட்டம்தான் ஆதரவு கொடுத்தது. அதுபோல மாநாட்டுக்கு அனைவரும்  வர வேண்டும். பணம் கொடுத்து யாரையும் கூட்டிக் கொண்டு வரக் கூடாது. பணம் வாங்கிக் கொண்டு வருபவர்கள் எல்லா கட்சிக்கும் போவார்கள். தமிழகம் நலன் காக்க ம.தி.மு.க இருக்கிறது. நாம் காப்போம். கம்யூனிஸ்ட் கட்சியில் மாநாடுகளுக்கும் கூட்டங்களுக்கும் வீட்டுப் பெண்களை அழைத்து வருகிறார்கள். நாம் யாரும் ம.தி.மு.க கூட்டங்களுக்கு அழைத்து வர வேண்டும் என நினைப்பது கிடையாது.

மாநாட்டுக்கு பெண்களை அழைத்து வர வேண்டும். மாநாட்டில் மூன்று மண்டபங்கள் பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மழையால் கூட்டம் தடைபடாமல் இருக்க பந்தல் போடப் போகிறோம். கம்யூனிஸ்ட் வழியை மாநாட்டில் கடைப்பிடிக்க வேண்டும். அவர்கள் எல்லோரும் மாநாட்டில் பேசுவது கிடையாது. ஒரு சிலர் மட்டும்தான் பேசுவார்கள். அதுபோலதான் நமது மாநாடு நடக்கப்  போகிறது. 'சங்கொலி' தான் திராவிட இயக்க ஏட்டில் சிறந்தது என நல்லகண்ணு சொல்லி இருக்கிறார். நீங்கள் ஐந்து ஆண்டு சந்தாவாக 2,500 ரூபாய் தாருங்கள். சினிமாவுக்கு போனால், ஓட்டலுக்குப் போனால் ஆயிரக்கணக்கில் செலவு செய்கிறீர்கள். அதுபோல சங்கொலிக்கு சந்தா தாருங்கள். நாளை முதல் மதிமுகம் டிவி தமிழகம் முழுவதும் ஒளிபரப்பப் பட இருக்கிறது. அதில் என்னுடைய உரையை கேட்கலாம்' என்று பேசினார்.

அடுத்த கட்டுரைக்கு