Published:Updated:

முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தை விவசாயிகளுக்கும் விரிவுபடுத்த ஜெ.உத்தரவு!

முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தை விவசாயிகளுக்கும் விரிவுபடுத்த ஜெ.உத்தரவு!
முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தை விவசாயிகளுக்கும் விரிவுபடுத்த ஜெ.உத்தரவு!
முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தை விவசாயிகளுக்கும் விரிவுபடுத்த ஜெ.உத்தரவு!

சென்னை:  முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டத்தை விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படுத்த தமிழக முதல்வர் ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"
 
'உடலில் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம்' என்ற கவிமணியின்  கூற்றிற்கேற்ப உடலை உறுதியாக்கி நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தை  அனைவரும் பெறும் வகையிலும், ஏழை, எளிய, நலிந்த மக்கள்  பயன்பெறும்  வகையிலும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் என்ற ஒரு புதிய  காப்பீட்டுத் திட்டத்தை 11.1.2012 அன்று முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி  வைத்தார்கள்.

இத்திட்டத்தின்படி ஒரு குடும்பத்திற்கு வருடத்திற்கு 1 லட்சம் ரூபாய் வீதம் 4  வருடங்களுக்கு 4 லட்சம் ரூபாய் வரையிலும், சில குறிப்பிட்ட சிகிச்சைகளுக்கு 1.50  லட்சம் ரூபாய் வரையிலும் காப்பீடு வழங்கப்படுகிறது.
 
விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள  முதலமைச்சர் ஜெயலலிதா முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் பதிவு  செய்துள்ள உறுப்பினர்களுக்கும் இத்திட்டத்தினை விரிவுப்படுத்த ஆணையிட்டுள்ளார்கள்.  இதன் மூலம் விவசாயப் பெருமக்கள் அனைவருக்கும் தரமான மருத்துவ வசதி  கிடைக்கவும், அவர்கள் நோயற்ற வாழ்வு வாழ்ந்து, உற்சாகமாக பணியாற்றவும்   வழிவகை ஏற்படும்.
 
புற்றுநோயினால் அவதியுறும்  ஏழை, எளிய மக்களுக்கு தரமான மருத்துவ சேவை  அளிக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு தற்போது  தஞ்சாவூர், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலியிலுள்ள அரசு மருத்துவனையில்  புற்றுநோய் சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் கோபால்ட் கருவிகளின் திறனை  அதிகரிக்கும் வகையில், அக்கருவியில் உள்ள உள்ளீடுகளை மாற்றி புதியவனற்றை  பொருத்த, 2 கோடியே 61 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர்  ஜெயலலிதா  ஆணையிட்டுள்ளார்.
 

##~~##
சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் 1978 ஆம் ஆண்டு புற்றுநோய் பிரிவு  தொடங்கப்பட்டது.  இந்தப் பிரிவில் புற்றுநோய்க்கான உயர்தர சிகிச்சை பலதரப்பட்ட  மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றது.   இந்த புற்றுநோய் சிகிச்சை துறையினை  புற்றுநோய் உயர் சிகிச்சை மையமாக தரம் உயர்த்த 17 கோடி ரூபாய் செலவில் புதிய  கட்டடம் கட்டப்பட்டு முடிவடையும் நிலையில் உள்ளது.
 
இந்த புற்றுநோய் உயர் சிகிச்சை மையத்துக்கு புதிய இயந்திரங்கள், மருத்துவக்  கருவிகள், மரச்சாமான்கள், துணி வகைகள் மற்றும் கணினிகள் வாங்குவதற்கு 6  கோடியே 40 லட்சத்து 6 ஆயிரத்து 50 ரூபாய் மற்றும்  இந்த மையத்தில்  பணிபுரிவதற்காக 83 புதிய மருத்துவம் மற்றும் மருத்துவம் சாரா பணியிடங்களை  உருவாக்குவதற்கு 3 கோடியே 53 லட்சத்து 19 ஆயிரத்து 600 ரூபாய் என மொத்தம் 9  கோடியே 93 லட்சத்து 25 ஆயிரத்து 650 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து முதலமைச்சர்  ஜெயலலிதா  உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம்  புற்றுநோயினால் பாதிக்கப்படும் ஏழை எளிய மக்களுக்கு தரமான சிகிச்சை  பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.