Published:Updated:

லதா ரஜினிகாந்த் பள்ளியை இழுத்து மூடிய உரிமையாளர்!

லதா ரஜினிகாந்த் பள்ளியை இழுத்து மூடிய உரிமையாளர்!
லதா ரஜினிகாந்த் பள்ளியை இழுத்து மூடிய உரிமையாளர்!

சென்னையில் இயங்கிவரும் லதா ரஜினிகாந்துக்குச் சொந்தமான தனியார்ப் பள்ளியை அதன் உரிமையாளர் இன்று இழுத்து மூடினார். வாடகை பாக்கி தராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


 

சென்னை கிண்டி ரேஸ்கோர்ஸில்,  லதா ரஜினிகாந்த்துக்குச் சொந்தமான பள்ளி செயல்பட்டுவருகிறது. பள்ளி இயங்கிவரும் கட்டடத்தின் வாடகை பாக்கி,  கடந்த சில ஆண்டுகளாக செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.  வாடகை பாக்கி பல கோடி ரூபாய் உள்ளதாம். இதனால் கட்டடத்தின் உரிமையாளர், அந்தப் பள்ளி மாணவர்களை வெளியேற்றிவிட்டு, இன்று பள்ளியை இழுத்து மூடிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.  வெளியேற்றப்பட்ட மாணவர்கள், வேளச்சேரியில் உள்ள ஒரு பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கட்டட உரிமையாளர் வெங்கடேஸ்வரலு,  ’கிண்டியில் லதா ரஜினிகாந்த் நடத்திவரும் பள்ளிக்கு 2009 முதல் தற்போது வரை 10 கோடி வாடகை பாக்கி தர வேண்டி உள்ளது. 10 கோடி ரூபாய் கேட்டு உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த போது 2 கோடி ரூபாய் தருவதாக லதா தரப்பு கூறியது. ஆனால் இன்னும் தரவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள  பள்ளி நிர்வாகம், ‘வாடகை தராததால் பள்ளி இழுத்து மூடப்பட்டதாக வெளியான தகவல் பொய்யானது. மக்கள் நம்ப வேண்டாம்’ என்று தெரிவித்துள்ளது.