Published:Updated:

ஜெயலலிதாவுக்கு இணையாக எடப்பாடி பழனிசாமி: கடலூரை மிரளவைத்த கட் அவுட்!

ஜெயலலிதாவுக்கு இணையாக எடப்பாடி பழனிசாமி: கடலூரை மிரளவைத்த கட் அவுட்!
ஜெயலலிதாவுக்கு இணையாக எடப்பாடி பழனிசாமி: கடலூரை மிரளவைத்த கட் அவுட்!

ஜெயலலிதாவுக்கு இணையாக எடப்பாடி பழனிசாமி: கடலூரை மிரளவைத்த கட் அவுட்!

அ.தி.மு.க ஆட்சி தொடங்கி ஓராண்டுதான் முடிவடைந்துள்ளது. ஆனால், அதற்குள் மூன்று முதல்வர்களை பார்த்துவிட்டோம். ஜெயலலிதாவின் மரணத்தில் தொடங்கியது கலகம். முதலில் இரண்டு அணிகளாக பிரிந்து, தற்போது ஏகப்பட்ட அணிகளாக சிதறிக்கிடக்கிறது அ.தி.மு.க. ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் அணிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தை ஒருபக்கம் நடந்துவரும் நேரத்தில், மறுபக்கம் தினகரன்  அணி - எடப்பாடி பழனிசாமி அணிகளுக்கு இடையே பனிப்போர் நிலவி வருகிறது.


பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, தினகரன் என்று மூன்று அணிகளும் தனித்தனியாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை நடத்துகின்றனர். குறிப்பாக, சசிகலா மற்றும் தினகரன் குடும்பத்தை ஒதுக்கி வைத்துவிட்டு ஆட்சி நடத்துவோம் என்பதையே பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில் கூறி வருகின்றனர். ஆனால், இரு அணிகள் இணையும் பட்சத்தில் முதல்வர் பதவி யாருக்கு என்பதில்தான் சிக்கல் நிலவி வருகிறது. பன்னீர்செல்வம் முதல்வர் பதவி வேண்டும் என்று அடம்பிடிக்கிறார். எடப்பாடியோ, முதல்வர் பதவியை மட்டும் விட்டுக்கொடுக்க முடியாது என்று பிடிவாதம் பிடிக்கிறார்.

குறிப்பாக, தன்னை எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் கலந்த ஒரு கலவையாகவே வெளிப்படுத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கூட்டம் கடலூரில் நடந்தது. மேலூர் கூட்டத்தில், தினகரன் கெத்து காட்டியிருந்த நிலையில், கடலூரில் நம் பலத்தை காட்ட வேண்டும் என்று களமிறங்கினர் எடப்பாடி அணியினர்.

கடலூர் முழுவதும் பேனர்கள், போஸ்டர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பொதுவாக எடப்பாடி தரப்பில் வைக்கப்படும் கட்-அவுட்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உருவங்கள் பெரிதாகவும், எடப்பாடியின் உருவம் சற்று சிறிதாகவும் இருக்கும். ஆனால், தற்போது கடலூரில் வைக்கப்பட்டுள்ள ஒரு கட்-அவுட்டில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு இணையாக பழனிசாமி பளீச்சென்று தெரியும் பிரமாண்ட கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன.  அதேபோல், முன்பு நடைபெற்ற மாநாடுகளைவிட கடலூரில் அதிகக் கூட்டம் இறக்கப்பட்டிருந்தது.

இதன்மூலம் ஆட்சிக்கும், கட்சிக்கும் அடுத்து நான்தான் தலைமை என்பது மட்டுமல்லாமல், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு தான் இணையானவர் என்பதை எடப்பாடி பழனிசாமி சொல்ல வருவதாகவே கடலூர் நிலவரம் உணர்த்துகிறது.

அடுத்த கட்டுரைக்கு