Published:Updated:

குரூப் 2 விவகாரத்தில் பெரிய தவறை மறைக்க முயற்சி: கருணாநிதி

குரூப் 2 விவகாரத்தில் பெரிய தவறை மறைக்க முயற்சி: கருணாநிதி
குரூப் 2 விவகாரத்தில் பெரிய தவறை மறைக்க முயற்சி: கருணாநிதி
குரூப் 2 விவகாரத்தில் பெரிய தவறை மறைக்க முயற்சி: கருணாநிதி

சென்னை: குரூப் 2 வினாத்தாள் விவகாரத்தில் யார் மீதோ நடவடிக்கை எடுத்து குற்றத்தை மறைப்பதற்கான முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேர்வாணைய கழகத்தின் மூலம் நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து விட்டு புதிதாக தேர்வு நடத்தப்போவதாக அறிவிப்பு வந்துள்ளதே; கேள்வித்தாள் தேர்வாணைய கழகத்தில் இருந்து வெளியாக காரணமாக இருந்தவர்கள் மீது எந்த நடவடிக்கையும் கிடையாதா?.

குரூப்-2 தேர்வில் தமிழகத்தைச்சேர்ந்த மாணவர்கள் 4 லட்சத்திற்கு மேற்பட்டோர் தேர்வு எழுதி முடித்து விட்டார்கள். அந்த தேர்வின் போது ஒரு சில மாவட்டங்களில் மட்டும் கேள்வித்தாள் முன்னரே வெளியாகியுள்ளது. ஆனால் கேள்வித்தாள் வெளியானது பற்றி புகார் கொடுத்தவர்களைத்தான்; அதிலும் ஒரு தலித் பெண்ணையே அரசு கைது செய்துள்ளது. தேர்வாணைய கழகத்தின் தவறு காரணமாகத்தான் வினாத்தாள் வெளியாகியிருக்கிறது.ஆனால் யார் மீதோ நடவடிக்கை எடுத்து குற்றத்தை மறைப்பதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.

தவறை செய்து விட்டு, தற்போது மறுதேர்வு என்றால், ஏற்கனவே 4 லட்சம் பேர் தேர்வு எழுதியவர்களில் எத்தனையோ பேர் நன்றாக எழுதியிருப்பார்கள். அவர்கள் மறுதேர்வு என்றால் எந்த அளவிற்கு மன உளைச்சல் அடைவார்கள். எந்த தவறும் செய்யாத அவர்கள் தேர்வாணைய கழகத்தின் தவறுக்காக தண்டனை அடைய வேண்டுமா?.

ஆட்சிக்கு வந்த 6 மாதங்களில் மின் உற்பத்தியை பெருக்கி மின்வெட்டு இல்லாத நிலையை உருவாக்குவோம் என்று சவால்விட்ட அ.தி.மு.க. ஆட்சியில் இன்று மின்வெட்டு என்ன வாயிற்று?.

13-8-2012 அன்று மாலை 2,500 மெகாவாட் ஆக இருந்த காற்றாலை மின் உற்பத்தி, 14-8-2012 அன்று அதிகாலை 2 மணியளவில் 1,500 மெகாவாட் ஆகவும், நேற்று காலையில் 500 மெகாவாட் ஆகவும் சரிந்துள்ளது. மின் பற்றாக்குறையை சமாளிக்க கடந்த 2 நாட்களாக தினமும் 5 முதல் 7 மணிநேரம் வரை மின்தடை ஏற்படுகிறது. மொத்தம் 2,970 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அனல் மின் நிலையங்களில் 14-8-2012 அன்று 2,400 மெகாவாட் மின்சாரமே உற்பத்தியாகியுள்ளது. மொத்தம் 2,080 மெகாவாட் திறன் கொண்ட நீர் மின்நிலையங்களில் 500 மெகாவாட் மின்சாரம்தான் உற்பத்தியாகிறது.

மின்சாரம் முறையாக விநியோகிக்காதபோது, மின் கட்டண உயர்வு அவசியம் தானா?.


குடியிருப்புக்கான புதிய மின் இணைப்பு கொடுக்க வேண்டுமென்றால் ஒருமுனை இணைப்புக்கு இதுவரை ரூ.250 என்றிருந்த கட்டணத்தை, 900 ரூபாயாக உயர்த்துவதற்கு மின்வாரியம் சிபாரிசு செய்திருக்கிறது. மும்முனை இணைப்பு என்றால் இதுவரை 500 ரூபாய் என்றிருந்த கட்டணத்தை, 1,600 ரூபாயாக உயர்த்த வேண்டுமென்று மின் வாரியம் பரிந்துரைத்துள்ளது.

##~~##
வீடுகளுக்கான மீட்டருக்கான வைப்புத் தொகையையும் உயர்த்த பரிந்துரை அளித்திருக்கிறார்கள். ஏதோ ஒரு காரணத்தினால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மறு இணைப்பு கோரினால் இணைப்பு தர தற்போது கட்டணம் 300 ரூபாய். இதை 8 மடங்குக்கு மேல் உயர்த்தி இனி ரூ.2,500 செலுத்த வேண்டுமென்று பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.
மீட்டர் அட்டை அதாவது ஒவ்வொரு மாதமும் எவ்வளவு மின்சாரம் உபயோகித்திருக்கிறார்கள் என்பதைக் குறித்துத் தருகிறார்களே அந்த மீட்டர் அட்டைக்கு தற்போது கட்டணம் எதுவும் இல்லை. ஆனால் இனி அந்த மீட்டர் அட்டைக்காக 10 ரூபாய் செலுத்த வேண்டும். அதுவே எச்.டி. மற்றும் எல்.டி.சி.டி. இணைப்புகளுக்கான அட்டை என்றால் 100 ரூபாய் கட்டணம் கட்ட வேண்டும்.
இவ்வாறு அதில் கருணாநிதி கூறியுள்ளார்.