Published:Updated:

’முதலில் இணைப்பு நடக்கட்டும்’ - வெற்றிவேல் எம்.எல்.ஏ பேட்டி

’முதலில் இணைப்பு நடக்கட்டும்’ - வெற்றிவேல் எம்.எல்.ஏ பேட்டி
’முதலில் இணைப்பு நடக்கட்டும்’ - வெற்றிவேல் எம்.எல்.ஏ பேட்டி

’முதலில் இணைப்பு நடக்கட்டும்’ - வெற்றிவேல் எம்.எல்.ஏ பேட்டி

'தொண்டர்கள் பலம் எங்களிடம் இருப்பதால் நாங்கள்தான் அ.தி.மு.க' என்று டி.டி.வி. தினகரன் ஆதரவாளரும், எம்.எல்.ஏவுமான வெற்றிவேல் கூறினார். 

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது.  எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அவரது இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனையில் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அதேபோல், கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மாநிலங்களவை உறுப்பினர் மைத்ரேயன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தநிலையில் ராயப்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் தினகரன் ஆதரவாளர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ வெற்றிவேல், முன்னாள் அமைச்சர் பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வெற்றிவேல், ‘ வடசென்னையில் வரும் 23-ம் தேதி நடைபெறும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா குறித்து ஆலோசனை நடத்தினோம். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைவது குறித்து ஆலோசிக்கவில்லை. இணைப்பு நடந்த பிறகே அதுகுறித்து கருத்து கூற முடியும். தொண்டர்கள் பலம் எங்களிடம் இருப்பதால் நாங்கள்தான் அ.தி.மு.க. மேலூர் பொதுக்கூட்டத்தில் அதை நீங்கள் கண்கூடாகப் பார்த்திருக்கலாம்' என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு